கம்பராமாயணம் 5694 · சுந்தர 10.45

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குன்று உள - (அனுமன் எடுத்துத் தாக்குவதற்கு) மலைகள் உள்ளன; மரம் உள - மரங்களும் உள்ளன; குலம் கொள் பேர் எழு, ஒன்று அல பல உள - சிறப்புப் பொருந்திய பெரிய எழுக்களும் (என்ற இவை) பலவாக உள்ளன; உயிர் உண்பான் உள - இப்படைகள் உண்பதற்கு உயிர்களும் உள்ளன; அன்றினர் பலர் உளர் - சினந்து போர் செய்யுமாறு அரக்க வீரர் பலரும் உள்ளனர்; ஐயன் கையினில் பொன்றுவது அல்லது - (அப்பகைவர்கள் அனுமன் கையால் இறந்துபடுவது அல்லாமல்; புறத்துப் போவரோ - வெளியே தப்பிப் போவார்களோ ? (மாட்டார் என்றபடி)

அந்த அரக்கர்வீரர் இறந்தொழிவதற்கு வேண்டியன யாவும் நிரம்பியிருத்தலால் அவர்கள் யாவரும் இறந்தொழிவது அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறப்பட்டது. அன்றினர் - பகைவர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There are hills; there are trees; there are great, noble iron bars,
  2. not one but many; there is the life-devourer;
  3. there are many foes; there are the noble one's hands;
  4. could they get away, other than by dying?

What the poem says

Everything needed for the demons' destruction is at hand: hills, trees and iron bars for Aṉumaṉ to fight with, death to devour their lives, plenty of enemies to be killed, and Aṉumaṉ's own hands. The demons have no way out except death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu uḷa maram uḷa kulam koḷ pēr eḻu
oṉṟu ala pala uḷa uyir uṇpāṉ uḷa;
aṉṟiṉar palar uḷar; aiyaṉ kai uḷa;
poṉṟuvatu allatu puṟattup pōvarō.