கம்பராமாயணம் 5695 · சுந்தர 10.46

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முழுமுதல் கண்ணுதல் முருகன் தாதை கை
மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினில் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினைக் கரி எனக் கொன்று நீக்கினான்.

பொருள் · Meaning in Tamil

முழு முதல் கண்ணுதல் முருகன் தாதை - மும் மூர்த்திகளில் சேர்ந்தவனாகிய, கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின் தந்தையாகிய சிவபிரானது; கை மழு என - கையில் ஏந்திய மழுவாயுதம் போல; பொலிந்து ஒளிர் - மிக்கு விளங்குகின்ற; வயிர வான் தனி எழு வினின் - உறுதியான சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணினால்; பொலன் கழல் அரக்கர் ஈண்டிய குழு வினை - அழகிய வீரக்கழல் அணிந்த அரக்கருடைய நெருங்கிய கூட்டத்தை; களம் படக் கொன்று நீக்கினான் - போர்க் களத்தில் இறந்து விழுமாறு கொன்று தொலைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his single, fine, adamant iron bar that shone and blazed
  2. like the axe in the hand of the eye-browed Father of Murukaṉ, the first and whole,
  3. he slew the massed throng of the demons with golden anklets
  4. so that they fell on the field, and cleared them away.

What the poem says

Aṉumaṉ's iron bar flashes like the battle-axe in the hand of Śiva, the primal god with an eye in his forehead and the father of Murukaṉ. With it he cuts down the whole crowd of gold-ankleted demons, and the field is cleared of the generals' army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḻumutal kaṇṇutal murukaṉ tātai kaim
maḻu eṉap polintu oḷir vayira vāṉ taṉi
eḻuviṉiṉ polaṅ kaḻal arakkar īṇṭiya
kuḻuviṉaik kaḷampaṭak koṉṟu nīkkiṉāṉ.