கம்பராமாயணம் 5698 · சுந்தர 10.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எய்த கடும்கணை யாவையும் எய்தா - (அந்தப் பஞ்சசேனாபதிகள் எய்த கொடிய அம்புகள் எல்லாம் தன்னை வந்து அடையாமல்; நொய்து அகலும்படி கைகளின் நூறா - எளிதில் ஒழிந்து போம்படி (தன்) கைகளினால் தூளாக்கிவிட்டு; நெடுந்தேர் - (பிறகு, பஞ்ச சேனாபதிகளுள் ஒருவனது) பெரிய தேரிலே; பொய்து - துளைக்கப்பட்டு; அகடு ஒன்று பொருந்தி செய்து - நடுவில் நாட்டப்பட்டதாகிப் பொருந்தி செய்திருந்த; கடும் பொறி ஒன்று சிதைத்தான் - விரைந்து செல்வதற்குரிய இயந்திரம் ஒன்றை அழித்தான்.
அந்தப் பஞ்சசேனாபதிகளை அழிக்கக் கருதிய அனுமன், அவர்களுள் ஒருவனது தேரின் விசையந்திரத்தைச் சிதைத்தான் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that none of the fierce arrows they shot could reach him,
- he crushed them with his hands till they easily scattered;
- then he smashed a fierce mechanism that had been built
- into the bored-through middle of a tall chariot.
What the poem says
Aṉumaṉ swats away every arrow the generals shoot, grinding them to bits with his bare hands. Then he goes for one general's chariot and wrecks the device fixed at its centre that drove it at speed.