கம்பராமாயணம் 5699 · சுந்தர 10.50

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான்
முற்றின வீரனை வானின் முனிந்தான்
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்
எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான்.

பொருள் · Meaning in Tamil

உற்று உறு தேர் சிதையா முன் - (பொறி) பொருந்திய அத்தேர் அழிவதற்கு முன்னமே; உயர்ந்தான் - அவரக்கன் அத்தேரினின்றும் உயர்ந்து எழுந்தான்; முற்றின வீரனை - அவன் அங்கும் தன்னை மேலெழாதபடி முற்றிக் கொண்ட வீரனாகிய அனுமனை; வானில் முனிந்தான் - ஆகாயத்திலிருந்தபடியே எதிர்த்தான்; பொன்திரள் நீள் மழு ஒன்று பொறுத்தான் - (அவனை அனுமன், கரும் பொன்னால் திரட்டப்பட்ட நீண் மழு ஒன்றை தாங்கியவனாய், எற்றினன் - தாக்கியடித்தான்; அஃது - அந்த இரும்புத் தூணை; அவன் வில்லினின் ஏற்றான் - அந்த அரக்கன் தனது வில்லினால் தன் மேல் விழாதபடி தாங்கித் தடுத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the chariot he stood in was shattered, he rose up;
  2. in the sky he fought in fury with the hero who had hemmed him in;
  3. the hero took up a long iron bar wrought of gold-coloured metal
  4. and struck; the demon caught the blow upon his bow.

What the poem says

The general leaps into the air before his chariot falls apart and attacks Aṉumaṉ from the sky. Aṉumaṉ swings a long iron club at him, and the demon blocks the blow with his bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟu uṟu tēr citaiyāmuṉ uyarntāṉ
muṟṟiṉa vīraṉai vāṉil muṉintāṉ
poṉ tiraḷ nīḷ eḻu oṉṟu poṟuttāṉ
eṟṟiṉaṉ; aḵtu avaṉ villiṉil ēṟṟāṉ.