கம்பராமாயணம் 5700 · சுந்தர 10.51

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முறிந்தது மூரி வில்; அம் முறியே கொண்டு
எறிந்த அரக்கன் ஓர் வெற்பை எடுத்தான்;
அறிந்த மனத்தவன் அவ் எழுவே கொண்டு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான்.

பொருள் · Meaning in Tamil

மூரி வில் முறிந்தது - (அந்த அரக்கனுடைய) வலிய வில் முறிந்து போயிற்று; அம் முறியே கொடு - அந்த வில்லின் முறிந்த துண்டையே கையில் கொண்டு; எறிந்த அரக்கன் - அனுமன் மீது வீசி எறிந்த அந்த அரக்கன்; ஓர் வெற்பை எடுத்தான் - மீண்டும் ஒரு மலையை அனுமன் மீது எறியத் தூக்கினான்; அறிந்த மனத்தவன் - அரக்கனின் கருத்தை அறிந்த மனத்தவனாகிய அந்த அனுமன்; அவ் எழுவே கொடு - (தனது கையில் கொண்டிருந்த) அந்த இரும்புத் தூணைக் கொண்டே; எறிந்த அரக்கனை - தன்மீது வில் முறிகொண்டு எறிந்த அரக்கனுடைய; இன் உயிர் உண்டான் - இனிய உயிரை அழித்தான்.

அரக்கன் மலையை எடுப்பது அறிந்து அதற்கு முன்னே அனுமன் அவனை இரும்புத் தூணால் அடித்துக் கொன்றான் என்க. அரக்கனே யாயினும் அவனுக்கு அவன் உயிர் இனியதுதானே; ஆகையால் அரக்கனது உயிரை 'இன்னுயிர்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mighty bow snapped; with that broken piece
  2. the demon struck at him, then lifted up a hill;
  3. he who read his mind, with that same iron bar,
  4. took the sweet life of the demon who had struck at him.

What the poem says

The demon's bow breaks under the blow. He throws the broken half at Aṉumaṉ and picks up a hill to hurl next, but Aṉumaṉ sees what he intends and kills him first with the iron bar. This is the first of the five generals to die.

The poet calls the demon's life 'sweet' because even to a demon his own life is dear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟintatu mūri vil; am muṟiyē koṭu
eṟinta arakkaṉ ōr veṟpai eṭuttāṉ;
aṟinta maṉattavaṉ av eḻuvē koṭu
eṟinta arakkaṉai iṉ uyir uṇṭāṉ.