கம்பராமாயணம் 5701 · சுந்தர 10.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒழிந்தவர் நால்வரும் - மற்றை நான்கு சேனைத்தலைவர்களும்; ஊழி உருத்த - ஊழிக்காலத்தில் சினந்து வெளிக் கிளம்பின; கொழுந்துறு தீ என - சுடர்க் கொழுந்துகள் பொருந்திய பெரும் தீயைப் போல; வெய்துறு கொட்பர் - வெப்பம் மிக்க சுழற்சியினராய்; வாளி பொழிந்தனர் - அம்புகளை (அனுமன் மீது) சொரிந்தனர்; கண்கள் புகைந்தன - அவ்வரக்கருடைய கண்கள் (கோபத்தினால்) புகைகளைக் கக்க; அவ் வீரன் மணித் தோள் சோரி விழுந்தன - அந்த வீரனான அனுமனது தோளிலிருந்து இரத்தம் ஒழுகியது.
“உறு தீ” இதனைக்கொண்டு, மிகுந்த தீ எனவும் பொருள் கொள்ளலாம். கொட்பு - சுழற்சி; கொட்பர் - சுழலுதலை உடையவர்கள்; உடற்சுழற்சி உள்ளச் சுழற்சி இரண்டனையும் குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The four who were left, whirling hot like the blazing fire
- that rages in fury at the end of the age,
- rained arrows; their eyes smoked;
- blood fell from that hero's jewelled shoulders.
What the poem says
The remaining four generals, spinning about in fury like the flames of the world-ending fire, pour arrows on Aṉumaṉ. Their eyes seem to smoke with rage, and this time their arrows draw blood from his shoulders.