கம்பராமாயணம் 5702 · சுந்தர 10.53

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிடை - அப்பொழுது; வீரனும் உள்ளம் அழன்றான் - வீரனான அனுமனும் மனம் கொதித்தவனாகி; மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் - வஞ்சனையை உடைய அரக்கரது வலிமையை அறிந்து; மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் - மேலே நெருப்பை உமிழ்வதான ஒரு கற்பாறையை எடுத்து (அவர்கள் மீது) தாக்குமாறு வீசி எறிந்தான்; தீயவர் - தீயவர்களாகிய அந்த அரக்கர் நால்வரும்; அச்சிலையை பொடிசெய்தார் - அந்த கற்பாறையை, (தங்கள் ஆயுதங்களால்) பொடியாக உதிரச் செய்தார்கள்.

எறியப்பட்ட மலையின் வேகத்தால் அதிலிருந்து நெருப்புப் பொறி உண்டாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the hero too grew hot at heart;
  2. he took the measure of the strength of the wily demons;
  3. he sent flying a rock that threw off fire as it rose;
  4. the evil ones smashed that rock to dust.

What the poem says

Wounded, Aṉumaṉ becomes angry and realises how strong these deceitful demons are. He hurls a huge rock that throws off sparks from the speed of its flight, but the four generals shatter it with their weapons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai vīraṉum uḷḷam aḻaṉṟāṉ;
māya arakkar valattai uṇarntāṉ;
mī eri uyppatu or kal cela viṭṭāṉ;
tīyavar ac cilaiyaip poṭi ceytār