கம்பராமாயணம் 5703 · சுந்தர 10.54

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொடுத்த தொடுத்த சரங்கள் துரந்த;
அடுத்து அகன் மார்பில் அழுந்தி அகன்ற;
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின்
எடுத்து ஒருவன்தனை விண்ணின் எறிந்தான்.

பொருள் · Meaning in Tamil

தொடுத்த தொடுத்த - மேன் மேலும் அந்நால்வர் பூட்டி விட்ட; சரங்கள் துரந்த - அம்புகள் அங்கு நின்றும் வெளிப்பட்டனவாய்; அகல் மார்பின் அடுத்து அழுத்தி அகன்ற - (அனுமனது) அகன்ற மார்பில் பொருந்தித் தைத்து அப்பாற் சென்றன; மிடல் தொழிலான் - (அப்போது) வலிய போர்த்தொழிலை உடைய அனுமன்; ஒருவன் தனை - (அந்நால்வருள்) ஒருவனை; விடு தேரொடு நொய்தின் எடுத்து - (அவன்) செலுத்திவந்த தேரோடு எளிதாகத் தூக்கி; விண்ணில் எறிந்தான் - ஆகாயத்தில் வீசினான்.

நால்வரின் ஒருவனைத் தேரோடு ஆகாயத்தில் அனுமன் வீசினன் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows they fitted one after another sped on;
  2. they struck and sank into his broad chest and passed through;
  3. he of mighty deeds easily lifted one of them, together with
  4. the chariot he drove, and flung him into the sky.

What the poem says

Volley after volley of arrows pierces Aṉumaṉ's broad chest. In reply he picks up one of the four generals, chariot and all, as if it were nothing, and throws him into the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toṭutta toṭutta caraṅkaḷ turanta;
aṭuttu akaṉ mārpiṉ aḻunti akaṉṟa;
miṭal toḻilāṉ viṭu tēroṭu noytiṉ
eṭuttu oruvaṉtaṉai viṇṇil eṟintāṉ.