கம்பராமாயணம் 5704 · சுந்தர 10.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏய்ந்து எழு தேர் - (அனுமனால்) எடுத்து எறியப்பட்டு மேல் எழுந்த தேர்; இமிழ் விண்ணினை எல்லாம் - ஒலிக் குணம் உடைய ஆகாய வெளி எங்கும்; ஓடி நீந்தியது - விரைந்து கடந்ததாக; நிமிர்ந்தது வேகம் - வேகத்தால் மிகுந்தது; ஓய்ந்தது - பின்னர் வேகம் குறைந்து போய்; வீழ்வதன் முன் - கீழே விழுவதற்கு முன்னமே, உயர் பாரில் பாய்ந்தவன் மேல் - சிறந்த பூமியில் பாய்ந்து குதித்த அவ்வரக்கர் தலைவன் மீது; உடன் மாருதி பாய்ந்தான் - உடனே அனுமன் பாய்ந்தான்.
எறியப்பட்ட வேகத்திற்குத் தக்க வேகத்தில் தேர் பறந்தது என்பதை 'ஏய்ந்து எழு தேர்' எனக் குறித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariot, rising as fitted the throw, swam across
- the whole resounding sky; it raced and soared; its speed
- slackened; before it fell, the demon leapt down to the great earth,
- and at once Māruti leapt upon him.
What the poem says
The thrown chariot flies across the sky as fast as it was hurled, then slows and begins to fall. Before it lands the general jumps down to the ground, and Aṉumaṉ instantly springs on him.