கம்பராமாயணம் 5705 · சுந்தர 10.56

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மதத்த களிற்றினில் வாள் அரி ஏறு
கதத்தது பாய்வது போல் கதிகொண்டு
குதித்து அவன் மால்வரை மேனி குழம்ப
மிதித்தனன் வெம் சின வீரருள் வீரன்.

பொருள் · Meaning in Tamil

வெம் சின வீரருள் வீரன் - கொடிய சினம் மிக்க வீரர்களுள் பெரு வீரனாகிய அனுமன்; மதித்த களிற்றினில் - தருக்குற்ற யானையின் மீது; வாள் அரி ஏறு கதித்தது பாய்வதுபோல - ஒளிதங்கிய ஆண்சிங்கம் கோபம் கொண்டு பாய்வது போல; கதி கொண்டு குதித்தான் - விரைவாக அவன்மீது குதித்து; மால் வரை மேனி குழம்ப மிதித்தான் - பெரிய மலை போன்ற (அந்த அரக்கனுடைய) உடம்பு சிதைந்து இரத்தம் குழம்பும்படி கால்களால் மிதித்துக் கொன்றான்.

பஞ்சசேனாபதிகளுள் இரண்டாமவன் கொல்லப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a bright-maned lion in wrath springs
  2. upon a proud bull elephant, he gathered speed
  3. and leapt, and trampled him till his mountain-like body was mashed,
  4. the hero among heroes of fierce wrath.

What the poem says

Like a lion pouncing on an arrogant elephant, Aṉumaṉ leaps on the general and stamps his huge body into a bloody pulp. The second of the five generals is dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1matitta kaḷiṟṟiṉil vāḷ ari ēṟu
katittatu pāyvatu pōl katikoṇṭu
kutittaṉaṉ mālvarai mēṉi kuḻampa
mitittaṉaṉ veñ ciṉa vīraruḷ vīraṉ.