கம்பராமாயணம் 5706 · சுந்தர 10.57

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்
தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார்
வேண்டின வெம் சமம் வேறு விளைப்பார்
'ஈண்டு இனி ஏகுதிர்'என்று எதிர் சென்றார்.

பொருள் · Meaning in Tamil

மூவர் மூண்ட சினத்தவர் முனிந்தார் - மீதியிருந்த மூவர் மிகுந்த கோபம் உள்ளவர்களாய் (அனுமனிடம்) வெறுப்புற்றவராகி, தூண்டிய தேரர் - தமது தேர்களைச் செலுத்தியவர்களாய்; சரங்கள் துரந்தார் - (அனுமன் மீது) அம்புகளைத் தொடுத்தனர்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார் - (அவர்கள் மேலும்) தாம் விரும்பிய கொடிய போரை வேறு விதங்களிலும் செய்யத் தொடங்கியவராய்; யாண்டு இனி ஏகுதி ? - இனி நீ எங்குத் தப்பிப் போவாய் ?; என்று எதிர் சென்றார் - என்று சொல்லிக் கொண்டே அனுமன் முன் எதிர்த்துச் சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The three, their anger kindled, raged;
  2. urging on their chariots, they let fly their arrows;
  3. waging the fierce battle they desired in other ways as well,
  4. 'Where will you go now?' they cried, and advanced to meet him.

What the poem says

The three surviving generals, burning with fury, drive their chariots at Aṉumaṉ, shooting arrows and attacking in every way they know, and taunt him that he has nowhere left to run.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūṇṭa ciṉattavar mūvar muṉintār
tūṇṭiya tērar caraṅkaḷ turantār
vēṇṭiya veñ camam vēṟu viḷaippār
'yāṇṭu iṉi ēkuti'eṉṟu etir ceṉṟār.