கம்பராமாயணம் 5707 · சுந்தர 10.58

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்
மருண்டு விசும்பு உறைவோர்களும் அஞ்ச
முரண்தரு தேர் அவை ஆண்டு ஒரு மூன்றின்
இரண்டை இரண்டு கையும் கொடு எழுந்தான்.

பொருள் · Meaning in Tamil

திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் - பருத்து உயர்ந்த இரண்டு தோள்களை உடைய ஆஞ்சனேயன்; அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச - காவலை உடைய தேவலோகத்தில் வாழ்பவரான தேவர்களும் அஞ்சும்படி; முரண் தரு தேர் அவை ஒரு மூன்றில் - தன்னோடு மாறுபட்ட மூன்று தேர்களுக்குள்ளே; ஆண்டு - அப்போது; இரண்டை இரண்டு கையின் கொடு எழுந்தான் - தன் இரண்டு கைகளிலே இரண்டு தேர்களை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lion of Añcaṉai, with his pair of thick, high shoulders,
  2. so that even the dwellers of the guarded heaven took fright,
  3. of the three hostile chariots there
  4. took two in his two hands and rose up.

What the poem says

Aṉumaṉ, the lion-like son of Añcaṉai, seizes two of the three enemy chariots, one in each hand, and springs into the air with them. Even the gods in their well-guarded heaven are frightened by the sight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiraṇṭu uyar tōḷ iṇai añcaṉai ciṅkam
araṇ taru viṇ uṟaivārkaḷum añca
muraṇtaru tēr avai āṇṭu oru mūṉṟil
iraṇṭai iraṇṭu kaiyiṉ koṭu eḻuntāṉ.