கம்பராமாயணம் 5708 · சுந்தர 10.59

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூங்கின பாய் பரி; சூதர் உலைந்தார்
வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார்;
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலாமுன்
ஓங்கிய மாருதி ஒல்லையில் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

பாய் பரி தூங்கின - (அனுமன் தேர்களைப் பற்றி மேலே எழும் போது பூட்டியிருந்த) பாய்ந்தோடும் குதிரைகள் அந்தரத்தில் தொங்கின; சூதர் உலைந்தார் - தேரோட்டுவோர் அழிந்தார்; வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார் - (அத்தேர்களிலிருந்த) பருத்த தோள்களை உடைய அவ்விரு தலைவர்களும் (அத்தேரினின்று) வான் வழியே விரைந்தனர்; ஆங்கு அது கண்டு - அப்போது அவர்கள் வானத்தில் செல்வதைக் கண்டு; அவர் போய் அகலாமுன் - அவர்கள் நீங்கித் தப்புவதற்கு முன்னம்; ஓங்கிய மாருதி - பெரு வடிவு படைத்த அனுமன்; ஒல்லையின் உற்றான் - விரைவில் (அவர்களைச் சென்று) கிட்டினான்.

தூங்குதல் - தொங்குதல்; ஒல்லை - விரைவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The leaping horses dangled in the air; the charioteers perished;
  2. the warriors with swollen shoulders sped off into the sky;
  3. seeing that, before they could get away,
  4. towering Māruti swiftly reached them.

What the poem says

As Aṉumaṉ soars upward holding the two chariots, the harnessed horses hang kicking in mid-air and the drivers are killed. The two generals jump out and try to escape through the sky, but Aṉumaṉ, in his giant form, catches up with them at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūṅkiṉa pāy pari; cūtar ulaintār
vīṅkiṉa tōḷavar viṇṇil vicaittār;
āṅku atu kaṇṭu avar pōy akalāmuṉ
ōṅkiya māruti ollaiyiṉ uṟṟāṉ.