கம்பராமாயணம் 5710 · சுந்தர 10.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ளை எயிற்றர் - வெண்மையான பற்களை உடையவர்களும், கறுத்து உயர் மெய்யர் - கரு நிறத்தோடு உயர்ந்த உடலை உடையவர்களும், பிள்ள விரித்த பிலப்பெருவாயர் - பிளக்கும்படியாக விரிந்து விளங்கிய பெரிய குகை போன்ற வாய்களை உடையவர்களுமான அவ்வரக்கர் இருவரும்; கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் - உட்கொள்ளும்படி கோபித்து நெருங்கி வருகின்ற வலிய இராகு கேது என்னும் பாம்புகளை ஒத்தனர்; ஒள் இகல் வீரன் - சிறந்த பராக்கிரமத்தை உடைய வீரனாகிய அனுமன்; அருக்கனை ஒத்தான் - சூரியனைப் போல விளங்கினான்.
முதலில் இராகுகேதுக்களால் சூரியன் விழுங்கப்பட்டது போல் காணப்பட்டாலும், பிறகு, உட்கொள்ளப் படாமல் ஒளியோடு விளங்குவது போல, முதலில் அரக்கரால் அனுமன் தாக்கப்பட்டாலும், உடனே அவர்களை வென்று விளங்குவான் என்பது கருத்து. அடுத்த பாடல் காண்க “வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர் - முரண்தொடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With white fangs and tall dark bodies,
- with huge cavern mouths stretched open wide enough to split,
- they were like the seizing serpents that close in, enraged, to swallow;
- the hero of shining valour was like the sun.
What the poem says
The two dark demons with gleaming white fangs and gaping mouths look like Rāhu and Kētu, the serpent demons who swallow the sun in an eclipse, and Aṉumaṉ is the sun they attack.
Just as the sun seems to be devoured but then shines out again, Aṉumaṉ, though attacked, will defeat them; the next verse completes the image. The poet also contrasts white teeth with black bodies.