கம்பராமாயணம் 5714 · சுந்தர 10.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அச் செருவில் நேர்ந்தார் - அப்போரில் போர்செய்ய அனுமனை எதிர்த்து வந்தவர்களான; நெய்தலை உற்ற வேற்கை நிருதர் - நெய்யை முனையில் பூசப்பெற்ற வேல் ஏந்திய கைகளை உடையவராய அரக்கர்கள்; உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை - தப்பிப் பிழைத்துத் திரும்பினோர் ஒருவரும் இல்லை; உள்ளார் அனைவரும் - அங்குப் போரிடாமல் மறைத்து பிழைத்திருந்த அரக்கர் அனைவரும்; காலன் உட்கும் ஐவரும் உலந்த தன்மை - யமனும் அஞ்சும் பஞ்ச சேனாபதிகள் அழிந்து போனதை; அமையக் கண்டார் - நேரில் கண்டறிந்து; கைதலைப் - போர்க்களத்தினின்று; பூசல் பொங்க - பேராரவாரம் மிகும்படி; கடுகினர் - (இராவணனிடம்) விரைந்து ஓடினார்கள்.
போரிடாமல் மறைந்து பிழைத்திருந்த அரக்கர் (உள்ளார் அனைவரும்) பஞ்ச சேனாபதிகள் இறந்ததை நேரில் கண்டார்கள். செய்தி சொல்ல இராவணனிடம் விரைந்தனர் என்க. கை - சேனைப் பகுதி. தலை - இடம். கைதலை - போர்க்களம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the demons with ghee-smeared spears in hand who met him in that battle,
- not one escaped and came back; those who were left
- rushed from the field amid a swelling uproar; they had all
- seen clearly how the five, whom even Kālaṉ dreads, had perished.
What the poem says
None of the demons who actually fought Aṉumaṉ survived. The only ones left are those who hid and stayed out of the battle; having watched the five generals, feared even by the god of death, being killed, they run in a clamour to tell Irāvaṇaṉ.
The spears are smeared with ghee, a common detail in old Tamil descriptions of weapons.