கம்பராமாயணம் 5715 · சுந்தர 10.66

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இறுக்குறும் இன்று நம்மைக் குரங்கு'என, இரங்கி, ஏங்கி,
மறுக்கு உறுகின்ற நெஞ்சின் மாதரை, வைது நோக்கி,
உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும்
சுறு கொள நோக்குவான் தன், செவித் தொளை தீயச் சொன்னார்.

பொருள் · Meaning in Tamil

குரங்கு நம்மை இன்னே இறுக்குறும் என - (குரங்கினால் விளையும் அழிவுகளைக் கேள்வியுற்று) “அந்தக் குரங்கு நம்மை இப்பொழுதே கொன்றுவிடும் என்று; ஏங்கி இரங்கி - ஏக்கமுற்று வருந்தி; மறுக்கு உறுகின்ற நெஞ்சின் மாதரை - கலக்கமுறும் மனத்தோடு நடுங்கிக் கொண்டு, தன் அருகில் நிற்கின்ற மகளிரை; வைது நோக்கி - (இராவணன் நிந்தித்துப் பார்த்துக் கொண்டு; உறுக்கு உறுசொல்லான் - அதட்டும் கடுஞ் சொற்களால், ஊழித் தீ என உலகம் ஏழும் சுறு கொள - கற்பாந்த காலத்துத் தோன்றும் பெருந்தீ என உலகங்கள் ஏழும் தீய்ந்து போம்படி; நோக்குவான் தன் - பார்த்துக் கொண்டிருப்பவனாகிய இராவணனுடைய; செவித் தொளை - இருபது காதுகளின் துவாரங்களும்; தீயச் சொன்னார் - தீய்ந்து போம்படி (கர்ண கடூரமாக பஞ்ச சேனாபதிகள் இறந்த செய்தியைக்) கூறலானார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the women, grieving and sighing 'The monkey will finish us right now,'
  2. stood with troubled hearts, he glared at them and cursed them;
  3. to him of threatening words, whose gaze could scorch all seven worlds
  4. like the fire at the end of the age, they spoke words that burned the holes of his ears.

What the poem says

Back in the palace, the women around Irāvaṇaṉ are trembling and lamenting that the monkey will kill them all, and he is scolding them with a glare that could burn up the seven worlds. Into this scene the fugitives arrive and give him news so dreadful that it scorches his twenty ears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṟukkuṟum iṉṉē nammaik kuraṅku'eṉa, iraṅki, ēṅki,
maṟukku uṟukiṉṟa neñciṉ mātarai, vaitu nōkki,
uṟukkuṟum collāṉ, ūḻit tī eṉa ulakam ēḻum
cuṟuk koḷa nōkkuvāṉ taṉ, cevit toḷai tīyac coṉṉār.