கம்பராமாயணம் 5716 · சுந்தர 10.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தானையும் உலந்தது - சேனையும் அழிந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார் - தலைவர்களான ஐந்து சேனாபதிகளும் இறந்தனர்; தாக்கப் போனபின் - போர் செய்யப் போன பிறகு; யாமே மீள்வேம் - யாங்கள் தாம் மீண்டவர் ஆவோம்; அதுவும் போர் புரிகிலாமை - அவ்வாறு மீண்டதும் நாங்கள் போரிட முடியாமல் இருந்ததால்தான்; அக்குரங்கும் - அந்தக்குரங்கும்; வானையும் வென்றுளோரை வல்லையில் மடிய நூறி - வானுலகத்தையும் வெற்றிகொண்டவர்களாகிய பஞ்ச சேனாபதிகளை விரைவில் கொன்றழித்து; ஏனையர் இன்மை - மற்றும் போர் செய்வோர் இன்மையால்; சோம்பி இருந்தது என்றார் - செய்தொழில் இல்லாமல் சோம்பல் மேற்கொண்டிருந்தது என்று கூறினார்கள்.
பஞ்சசேனாபதிகள் இறந்ததை இராவணனிடம் தெரிவித்தவர்கள், போரிட முடியாமல் பதுங்கியிருந்த அரக்கர்கள் என்று தெரிகின்றது. “போர் புரிகிலாமை' என்ற தொடரில் “கில் என்பது ஆற்றலை உணர்த்தும் இடைச் சொல்லாகும். ஆகையால் உயிர் தப்பியவர்கள் போர் புரிய இயலாதவர் என்பது தெரிகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The army has perished; the five commanders too are dead; of those who went
- to attack, we alone have come back, and that only because we could not fight;
- having swiftly slaughtered those who had conquered even heaven,
- that monkey, with no one else left to fight, sits there idle,' they said.
What the poem says
The survivors report: the army is gone and all five generals are dead. They themselves returned only because they were unable to fight. The monkey, having quickly killed warriors who had conquered heaven itself, now sits about idly because there is no one left to fight.
The last line adds insult to the news, showing how easy the victory was for Aṉumaṉ.