கம்பராமாயணம் 5717 · சுந்தர 11.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் - பூசப்பட்ட அரக்குப்படியப்பெற்றது போன்ற செந்நிறமாய் விளங்கும் கண்களை உடைய இராவணன்; கேட்டலும் - (பஞ்ச சேனாபதிகளும் சேனைகளும் இறந்தனர் எனக்) கேட்டவுடன்; வெகுளி வெந்தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி - கோபக் கொடுந்தீ, பொங்கி வருகின்ற பெருமூச்சை உடையவனாக; தோட்டு அலர் தெரியல் மாலை - இதழ்கள் மலரப் பெற்றதும் தேர்ந்து தொடுக்கப்பட்டதுமான அவனுடைய மாலை; சுறுக் கொண்டு ஏற - பொசுங்கி நாற்றம் பரந்து வீச; ஒருப் பட்டானை - போருக்கு ஆயத்தமாய் நின்ற இராவணனை; மைந்தன் - அவன் மகனாகிய அக்ககுமாரன்; தாள் துணை தொழுது - அவனது இரண்டு பாதங்களிலும் வணங்கி, தடுத்து - அவனைப் போருக்குச் செல்லாமல் தடுத்து; “இடை தருதி” என்றான் - (யான் சென்று போர் புரியுமாறு எனக்கு) “வாய்ப்புத் தருக' என்று கேட்டுக் கொண்டான்.
நயனத்தான் கேட்டலும், வெகுளி கிளர்ந்து உயிர்ப்பனாகி, மாலை சுறுக்கொண்டு ஏற ஒருப்பட்டான்; மைந்தன், தாள் தொழுது, தடுத்து, வாய்ப்புத் தருக என்றான் என்பது முடிவு. ஒருப்படுதல் - இயைந்திருத்தல்; ஊட்டுதல் - செந்நிறச் சாயம் பூசுதல். அக்கன் - அக்ஷன் என்பதன் தமிழ்த்திரிபு. அழிவில்லாதவன் என்று பொருள். இவன், மண்டோதரி மகன்; இந்திரசித்தனுடைய தம்பி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he heard it, breathing out the fierce fire of rage that flared up in him,
- so that the garland of chosen open-petalled flowers shrivelled and smoked along with its bees,
- he whose eyes looked as though stained with lac rose ready for battle; then
- his son bowed at his two feet, stopped him, and said, 'Give me the chance.'
What the poem says
This canto tells of Akkaṉ (Akṣa), Irāvaṇaṉ's younger son by Maṇṭōtari and brother of Intiracittu, who goes out against Aṉumaṉ.
On hearing of the generals' deaths, Irāvaṇaṉ is so enraged that his hot breath scorches the garland on his chest, bees and all, and his eyes turn red as lac. He gets up to go to battle himself, but Akkaṉ falls at his feet, holds him back and asks to be sent instead.