கம்பராமாயணம் 5718 · சுந்தர 11.2

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்ல, ஆகில், குரங்கின் மேல் சேறி போலாம்!
இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - என் தந்தையே !; முக்கணான் ஊர்தி அன்றேல் - (நம்மோடு பொருவது) மூன்று கண்களை உடைய சிவபிரானது வாகனமாகிய இடபம் அன்றாயின்; மூன்று உலகு அடியில் தாயோன் - மூவுலகங்களையும் தன் ஈரடிகளால் தாவியளந்தவனாகிய திருமால்; ஒக்க ஊர் பறவை அன்றேல் - சிறப்பமைய ஊர்ந்து செல்லும் பறவையாகிய கருடன் அன்றாயின்; அவன் துயில் உரகம் அன்றேல் - அத்திருமால் பள்ளி கொள்ளும் பாம்பாகிய ஆதிசேடன் அன்றாயின்; திக்கயம் அல்லதேல் - திக்குகளில் இருக்கும் யானைகளில் ஒன்றும் அன்றாயின்; புன்குரங்கின் மேல் சேறி போலாம் - அற்பக்குரங்கின் மீது போருக்குச் செல்கின்றாய் போலும் ! (நீ பொரச் செல்வது சிறிதும் தகுதியன்று); இக்கடன் அடியேற்கு ஈதி - இந்தக் கடமையை எனக்குத் தந்து; ஈண்டு இனிதின் இருத்தி - இங்கு நீ (கவலையின்றி) இனிதாக இருப்பாயாக.

இதுவும் அடுத்த பாடலும் குளகமாய், “ஏவுதி என்னை என்றான் என்பதோடு வினை முடிவு பெறும். 'நீ விலங்குகளோடு எதிர்த்துப் போர் புரிவது உனக்கு இழுக்கு; சிவபிரானின் இடபம், திருமாலின் கருடன், ஆதிசேடன், திக்கயம் இவற்றோடு போர் செய்தாலும் ஒருவாறு நேராகும். அற்பக் குரங்கோடு போர் செய்யச் செல்வது, உன் பெருமைக்கும் வலிமைக்கும் குறைவு” என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If it is not the mount of the three-eyed god, nor the bird that
  2. he who spanned the three worlds in strides rides upon, nor the serpent on which he sleeps,
  3. nor an elephant of the quarters, yet you would go out against a wretched monkey, it seems!
  4. Give this task to me, your servant; stay here at ease, my father.

What the poem says

Akkaṉ argues that the enemy is not Śiva's bull, nor Garuḍa, the bird that carries Viṣṇu, who measured the three worlds in his strides, nor Ātiśēṣaṉ, the serpent on which Viṣṇu sleeps, nor one of the elephants of the directions. Fighting any of those might be fitting for Irāvaṇaṉ, but going out against a petty monkey would lower his dignity.

He asks his father to hand the task to him and rest at ease. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukkaṇāṉ ūrti aṉṟēl, mūṉṟu ulaku aṭiyiṉ tāyōṉ
okka ūr paṟavai aṉṟēl, avaṉ tuyil urakam aṉṟēl,
tikkayam allatēl, puṉ kuraṅkiṉ mēl cēṟi pōlām!
ik kaṭaṉ aṭiyēṟku īti; irutti īṇṭu iṉitiṉ entāy