கம்பராமாயணம் 5719 · சுந்தர 11.3

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அண்டர் கோன் தன்னைப் பற்றித் தருக'எனா, அடியேன் நிற்க,
கொண்டனை எம்முன் தன்னைப் பணி, என நெஞ்சம் கோடி
உண்டது; தீரும் அன்றே! உரன் இலாக் குரங்கு ஒன்று ஏனும்,
எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை என்றான்.

பொருள் · Meaning in Tamil

அடியேன் நிற்க - அடியவனான நான், (உனது ஆணையை ஏற்றுச் செய்ய சித்தமாக) இருக்கவும், (என்னை ஏவாமல்); என்முன் தன்னை - என் தமையனான மேகநாதனை; அண்டர் கோன் தன்னைப் பற்றி தருக எனா - தேவர் தலைவனான இந்திரனைப் பிடித்து வருவாய் என்று சொல்லி; பணி கொண்டனை என - அவனை அத்தொழிலைச் செய்யக் கொண்டாய் என்று; நெஞ்சம் கோடல் உண்டு - மனத்தில் கொண்ட குறை ஒன்று உள்ளது; உரன் இலாக் குரங்கு ஒன்றேனும் - (இப்போது நான் வெல்லப் போவது) வலியற்ற ஒரு குரங்கையாவது பற்றித் தருக என்றால்; அது தீரும் அன்றே - (அதனைப் பிடித்துத் தந்தால்) அக்குறை ஒருவாறு நீங்கும் அல்லவா?; எண்திசை வென்ற நீயே - எட்டுத்திக்குகளையும் வென்ற நீயே; என்னை ஏவுதி என்றான் - என்னை அத்தொழிலுக்கு ஏவுவாயாக என்று கேட்டுக் கொண்டான்.

இந்திரனைப் பிடித்துத் தரும் வாய்ப்பைத் தமையன் இந்திர சித்துவுக்குத் தந்த போதே அதற்குத் தன்னை ஏவவில்லையே என்ற வருத்தம் தனக்கு உண்டென்றும் இந்த வெறும் குரங்கையாவது பற்றித் தருமாறு ஏவினால் ஒருவாறு அந்த மனக்குறை தீரும் என்றும் அக்ககுமாரன் வேண்டுகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While I, your servant, stood by, you told my elder brother,
  2. "Seize the king of the gods and bring him," and gave him that task; this has stayed
  3. as a grievance in my heart; will it not be cured now, even if by a feeble monkey!
  4. You who conquered the eight quarters, send me,' he said.

What the poem says

Akkaṉ reveals a private hurt. When Irāvaṇaṉ sent his elder son Mēkanātaṉ, later called Intiracittu, to capture Indra, Akkaṉ was standing ready but was passed over.

If he is now allowed to catch even this feeble monkey and bring it back, that old grievance will be eased, so he begs his all-conquering father to give him the order.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṇṭar kōṉ taṉṉaip paṟṟit taruka'eṉā, aṭiyēṉ niṟka,
koṇṭaṉai eṉmuṉ taṉṉaip paṇi, eṉa neñcam kōṭal
uṇṭu; atu tīrum aṉṟē! uraṉ ilāk kuraṅku oṉṟēṉum,
eṇ ticai veṉṟa nīyē, ēvuti eṉṉai eṉṟāṉ.