கம்பராமாயணம் 5721 · சுந்தர 11.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துண்டத் தூண் அதனில் தோன்றும் கோள் அரி - துண்டமாகிய ஒரு கம்பத்திலிருந்து தோன்றிய பற்றுதல் வல்ல நரசிங்கமானாலும்; சுடர் வெண் கோட்டு மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் - ஒளியை உடைய வெள்ளிய பல்லில், இந்தப் பூமி ஒரு துகள் போலத் தொத்திக் கொண்டிருக்க, ஓங்கி வளர்ந்த வராகமே ஆனாலும், (அவையும்); மலைதல் ஆற்றா - என்னுடன் பொருதற்குத் தரமுடையன அல்ல; அண்டத்தைக் கடந்து போகி அப்புறத்து ஆகலின் - (அந்தக்குரங்கு அண்ட கோளத்தைத் தாண்டி, அப்பாற் சென்று, புற அண்டத்தில் அகன்று சென்றாலும்; நின்வயின் தந்திலேனேல் - (யான் அதைப் பிடித்துக் கொண்டு வந்து) உன்னிடத்துத் தராது விட்டேன் என்றால்; தண்டத்தை இடுதி - அதற்குரிய தண்டனையை எனக்கு விதிப்பாய்.
கோள் அரி; கொள்ளுதல் வல்ல சிங்கம்; கொண்ட இலக்கைத் தப்பாமல் பற்றுதல் என்பது கோள் என்ற சொல்லின் குறிப்பு. முதனிலை நீண்ட தொழிற் பெயர். அன்று, ஏ; அசைகள். நரசிங்கமும், வராகமுமே கூட என்னுடன் பொரமுடியாதவை. இந்தக் குரங்கு எம்மாத்திரம் என்பது கருத்து. குரங்கு எங்குச் சென்றாலும் பிடித்து வருவேன்; இல்லையேல் தண்டனை பெறுவேன்” என்பது இவன் உறுதிமொழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not even the seizing lion that came out of the pillar cut in two, nor the boar
- that towered with the earth clinging to its bright white tusk, could fight me;
- if it crosses beyond the cosmic egg and goes off to the far side,
- and I do not bring it to you, then lay your punishment on me.
What the poem says
Akkaṉ continues his boast. Even Narasiṃha, the man-lion who burst from a split pillar, or Varāha, the giant boar who lifted the earth on his tusk like a speck of dust, could not stand against him, so what is a monkey?
Wherever the monkey flees, even beyond the shell of the universe, he will bring it back, or else his father may punish him.