கம்பராமாயணம் 5722 · சுந்தர 11.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என இவை இயம்பி - என்று இச்சொற்களைக் கூறி; “விடை ஈதி” என - அனுமதி எனக்கு அளிப்பாயாக என்று; இறைஞ்சி நின்ற - வணங்கித் தன்முன் நிற்கின்ற; வனைகழல் வயிரத் திண்தோள் மைந்தனை - கட்டிய வீரக்கழல்களையும் மிக வலிய தோள்களையும் உடைய அக்ககுமாரனை; மகிழ்ந்து நோக்கி - (இராவணன்) மகிழ்ச்சியோடு பார்த்து; துனை பரித் தேர் மேல் ஏறிச் சேறி என்று - “விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேர் மீது ஏறிநீ போவாயாக' என்று; இனைய சொன்னான் - இவ்வாறாகச் சொன்னான்; புனை மலர்த் தாரினானும் - அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்துள்ள அக்ககுமாரனும்; போர் அணி அணிந்து - போர்க் கோலம் பூண்டு; போனான் - சென்றான்.
எப்படியிருந்தாலும் குரங்கைப் பிடித்து வருவேன் என்று தன் மகன் உறுதி கூறியதனால், இராவணன், அவனை மகிழ்ந்து நோக்கி, போர்க்களம் செல்ல விடை கொடுத்தான். துனை - விரைவு; “கழிவும் துனைவும் விரைவின் பொருள” (தொல். சொல். 315)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having said these things, he said 'Grant me leave,' and stood bowing;
- looking with delight at his son, with his close-fitted anklets and hard, adamant shoulders,
- the king said, 'Mount a chariot of swift horses and go,' and other such words;
- and he, garlanded with fine flowers, put on his battle array and went.
What the poem says
Pleased by his son's confident promise, Irāvaṇaṉ gives Akkaṉ permission and tells him to ride out in a chariot drawn by swift horses. Akkaṉ, wearing a flower garland, arms himself for battle and sets off.