கம்பராமாயணம் 5723 · சுந்தர 11.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இந்திரன் இகலின் இட்ட - இந்திரன் போரில் தோற்றுக் கைவிட்டுப் போன; நொறில் வய - விரைவுள்ளனவும் வெற்றி தரக் கூடியனவுமான; நூறொடு நூறு புரவி - இரு நூறு குதிரைகள்; பூண்ட நோன் தேர் ஏறினன் - பூட்டப் பெற்ற வலிய தேரின் மீது ஏறினான்; அரக்கர் ஆசி கூறினர் - அரக்கர்கள் (அவனுக்கு) வாழ்த்துக் கூறினார்கள்; முரசக் கொண்மூ குமுறின - முரசங்களாகிய மேகங்கள் முழங்கின; ஊழி பேர் கடலை ஒப்ப - யுகமுடிவுக் காலத்தில் நிலை பெயர்ந்து (பொங்கி) வரும் கடலைப் போல; உரவுத்தானை ஊறின - வலிய சேனைகள் மேன்மேலும் அதிகமாகத் தொடர்ந்தன.
நொறில் - விரைவு; நோன் - வலிமை; கொண்மூ - மேகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He mounted, they say, the sturdy chariot that Intiraṉ had left behind in battle,
- yoked with a hundred and a hundred swift, mighty horses;
- the demons spoke their blessings; the drum-clouds rumbled;
- the strong army welled up like the great sea at the end of the age.
What the poem says
Akkaṉ rides in a chariot captured from Indra after his defeat, drawn by two hundred swift horses. The demons call out blessings, the war-drums rumble like thunderclouds, and his army surges after him like the ocean flooding at the end of the world.