கம்பராமாயணம் 5724 · சுந்தர 11.8

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை மரபில் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி.

பொருள் · Meaning in Tamil

பொருகடல் மகரம் எண்ணில் - அலைகள் மோதும் கடலில் உள்ள சுறாமீன்களை எண்ணக் கூடுமானால்; பூட்கை எண்ணலாம் - (அக்ககுமாரனுடன் போருக்குச் சென்ற) யானைகளை எண்ணிக் கணக்கிடலாம், பொங்கித் திரிவன மீன்கள் எண்ணில் - (அந்தக் கடலில்) செருக்கித் திரிவனவாகிய மீன்களை எண்ணமுடியுமானால்; செம்பொன் திண் தேர் எண்ணலாம் - செம்பொன்னாலான தேர்களை எண்ண முடியும்; உருஉறு மணலை எண்ணில் - அக்கடலில் தனித்தனியாகப் பிரித்து வைத்த மணலை எண்ணக் கூடுமானால்; உரவுத் தானை எண்ணலாம் - வலிமை பொருந்திய காலாள் சேனையை எண்ண முடியும்; மரபின் வரு திரை எண்ணில் - முறைமுறையாக வருகிற அலைகளை எண்ணக் கூடுமானால்; வாவும் வாசி எண்ணலாம் - தாவிச் செல்லும் குதிரைகளை எண்ண முடியும்.

அக்ககுமாரனுடன் சென்ற நால்வகைப் படையின் மிகுதி தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If you could count the makaras of the pounding sea, you could count the elephants; if you could count
  2. the fish that leap and roam, you could count the sturdy chariots of red gold;
  3. if you could count the grains of sand, you could count the strong army;
  4. if you could count the waves that come in ranks, you could count the leaping horses.

What the poem says

The size of Akkaṉ's army is conveyed by comparisons with the sea. His elephants are as many as the sea-monsters in the ocean, his golden chariots as many as its fish, his foot soldiers as many as the grains of sand on its shore, and his horses as many as its waves. In other words, they are beyond counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poru kaṭal makaram eṇṇil eṇṇalām pūṭkai; poṅkit
tirivaṉa mīṉkaḷ eṇṇil eṇṇalām cem poṉ tiṇ tēr;
uru uṟu maṇalai eṇṇil eṇṇalām uravut tāṉai;
varu tirai marapiṉ eṇṇil eṇṇalām vāvum vāci.