கம்பராமாயணம் 5726 · சுந்தர 11.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மந்திரக்கிழவர் மைந்தர் - மந்திராலோசனைக்குரியோருடைய குமாரர்கள்; மதி நெறி அமைச்சர் மக்கள் - புத்தியில் மிக்க மந்திரிகளுடைய மைந்தர்கள்; தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் - சேனைத்தலைவர்கள் பெற்ற புதல்வர்கள்; தாதைக்கு அந்தரத்து அரம்பை மாரில், தோன்றினர் ஆதி ஆனோர் பிறரும் - தந்தையாகிய இராவணனுக்குத் தேவலோகத்துத் தெய்வமகளிரிடம், பிறந்த புத்திரர் முதலிய பிறரும் ஆகிய; ஈர் இரண்டு இலக்கம் வீரர் - நான்கு லட்சம் வீரர்கள்; எந்திரத் தேரர் சூழ்ந்தார் - எந்திரமுள்ள தேரின் மீது ஏறியவர்களாய், அக்க குமாரனைச் சூழ்ந்து கொண்டு போருக்குச் சென்றனர்.
அக்ககுமாரனுடன் சென்ற நான்கு லட்சம் வீரர்களின் வகை கூறப்பட்டது. மந்திரக் கிழவர் முதல்வராகக் கூறியவர் நால்வராதலால், ஒவ்வொரு வகையினரின் குமாரரும் ஒவ்வொரு லட்சம் வீரர் என்க. அந்தரம் - மேலுலகம், விண்ணுலகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sons of the elder counsellors, the children of the ministers wise in policy,
- the sons born to the commanders of the army, and others, among them those born to his father
- from the nymphs of the heavens, in chariots fitted with machines,
- surrounded him: four hundred thousand warriors.
What the poem says
Akkaṉ's escort is further described: four hundred thousand warriors in mechanised chariots, made up of the sons of royal counsellors, of ministers, of army commanders, and of Irāvaṇaṉ's own sons by celestial nymphs. The commentary suggests a hundred thousand from each of the four groups.