கம்பராமாயணம் 5741e · சுந்தர 11.30

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆழிப் பொருபடை நிருதப் பெருவலி அடலோர் - கடல் போன்று கொந்தளித்துத் தாக்கும் சேனையில் உள்ள அரக்கர்களாகிய பெரிய வலிமை வாய்ந்த வீரர்கள்; ஆய் மகள், அடு - ஆயர் குல மகள், பாலைக் காய்ச்சித் தோய்த்து வைத்த; பேழ் வாய்த்தாழி படுதயிர் ஒத்தார் - அகன்ற வாயை உடைய மிடாவில் கடையப்படும் தயிர் போலக் குழைந்து வருந்தினர்; மாருதி - அனுமனோ; தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் - ஒப்பற்ற மத்தென்று சொல்லத்தகுந்த தன்மையைப் பொருந்தினான்; எறிவேல் இளையவர் - எறிந்து தாக்கும் வேலை உடைய அரக்கரான இளவீரர்கள்; இவ் ஏழ்புவனமும் - இந்த ஏழு உலகங்களிலும்; மிடை வாழ் உயிர்களும் - நெருங்கி வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும்; இனம் ஆக - ஒன்றாகக் கூடின போன்றிருக்க; ஊழிப் பெயர்வது ஓர் புனல் ஒத்தார் - (அவர்கள் யுக முடிவுக் காலத்தில் பொங்கி வரும் ஒரு பிரளய வெள்ளத்தை ஒத்து விளங்கினர்; மாருதம் ஒத்தான் - (உடல் வலிமையில்) வாயு பகவானை ஒத்தவனான அனுமன்; அனல் ஒத்தான் - (அந்த ஊழி வெள்ளத்தைப் பருகி அழிக்கும் வடவாமுகாக்கினி என்னும்) ஊழித் தீயை ஒத்தான்.

முதல் இரண்டு அடிகளில் போர்க்களம் தயிர்த் தாழியாகவும், அக்களத்தில் அகப்பட்ட அரக்க வீரர்கள், தாழியில் உள்ள தயிராகவும், அனுமன் அத்தயிரைக் கடையும் மத்தாகவும் உருவகப்படுத்தியதாகும். பின் இரண்டு அடிகளில் அரக்கர்கள் ஊழிப் பிரளயமாகவும், அனுமன் அதனை நீக்கும் அனலாகவும் உருவகப்படுத்தப்பட்டனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mighty, valiant demons of the sea-like army were like curds set by a herdsman's daughter
  2. in a wide-mouthed pot; Māruti took on the nature of a peerless churning-stick;
  3. the young warriors with hurling spears, like all the lives that crowd these seven worlds gathered together,
  4. were like the flood that surges at the end of the age; he was like the fire; he was like the Wind.

What the poem says

Two pictures of the battle. In the first, the battlefield is a wide pot of curds set by a cowherd girl, the demons are the curds, and Aṉumaṉ is the churning stick whipping them about.

In the second, the massed young demon warriors, as numerous as all the creatures of the seven worlds, are the deluge at the end of time, and Aṉumaṉ, mighty as his father the Wind, is the undersea fire that swallows that flood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻip poru paṭai nirutap peru vali aṭalōr āymakaḷ aṭu pēḻ vāyt
tāḻip paṭu tayir ottār; māruti taṉi mattu eṉpatu ōr takai āṉāṉ;
ēḻ ip puvaṉamum miṭai vāḻ uyirkaḷum eṟi vēl iḷaiyavar iṉam āka,
ūḻip peyarvatu ōr puṉal ottār; aṉal ottāṉ; mārutam ottāṉē.