கம்பராமாயணம் 5741g · சுந்தர 11.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரசித்துக்கு இளையவன் உற்றான் - இந்திரசித்தனுக்குத் தம்பியாகிய அந்த அக்ககுமாரனும் (அனுமனுக்கு எதிரே வந்தடைந்தான்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் - ஒரு நாளிலேயே பல லட்சக்கணக்கான வீரர் உயிர்களை அழிக்கப் பழகியவனான அனுமனும்; முகம் எதிர் வைத்தான் - அவனுக்கு எதிர்முகமாய் நின்றான்; அது கண்டார் விண்ணவர் - அந்நிலையைக் கண்ட தேவர்கள்; கசிவு உற்றார் - மனம் இரங்கியவர்களாய்; மாருதி நிலை எற்றாம் - (இனி) அனுமனுடைய நிலை யாது ஆகுமோ; என்பார் - என்று மனத்தில் துணுக்குக் கொண்டு கூறுபவர்களாய்; இனி - இப்பொழுது; இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் - இமையாக்கண்களை உடைமையாகிற இந்த ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்ற நாங்கள்; நல்லது பெற்றாம் - (இவ்விருவரும் பொருகின்ற போர் விநோதத்தைக் காணுமாறு) நன்மையைப் பெற்றவரானோம்; என்றனர் - என்று கூறுபவர்களாய்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் - (ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் (அப்போரைக் காணும் பொருட்டு வானத்தில்) எதிர் எதிராகப் போய் நின்றார்கள்.
போரை இடையீடின்றிக் காணுதற்குக் கண் இமையாமல் இருத்தல் வாய்ப்பு ஆயிற்று ஆதலின் மகிழ்ச்சி விளைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Intiracittu's younger brother came up; and he who had learned in a single day to devour many lives
- turned his face to meet him; the gods who saw it were moved;
- 'What will become of Māruti?' they said; and then, 'This unblinking pair of eyes is the one thing
- we have gained, and a good thing we have gained,' they said, and crowded face to face, never moving apart.
What the poem says
Akkaṉ reaches Aṉumaṉ, who has killed multitudes in a single day, and the two face each other. The gods watching from the sky are anxious about Aṉumaṉ's fate.
Then they rejoice in the fact that gods never blink: for once their unblinking eyes are a real blessing, since they will not miss a moment of this fight. They press together in rows to watch.