கம்பராமாயணம் 5741i · சுந்தர 11.34

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரில் சென்று - (பாய்ந்த அனுமன்) தேரிலே நின்று; எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் - எதிரேயுள்ள உளவுகோலைக் கையில் கொண்டுள்ள சாரதியின் உயிரை அழித்தான்; அப் பொரு செறிதிண் தேர் பாரில் சென்றது - (பின்னும் அனுமன் தனது கையால் நொறுக்கியதால்) அந்த ஒப்பற்ற கெட்டியான வலிய தேர் (சின்னா பின்னப்பட்டு) தரையில் விழுந்து விட்டது; பரிபட்டன - குதிரைகள் இறந்தன; அவன் வரிவில் சிந்திய பகழிக்கோல் சில - அந்த அக்ககுமாரன், தன் கட்டுகள் அமைந்த வில்லினால் பொழிந்த அம்புகளில் சில; மார்பில் சென்றன - அனுமன் மார்பில் பாய்ந்தன; சில பொன் தோளிடை மறைவுற்றன - மற்றும் சில அம்புகள் அனுமனது பொன்போன்ற தோளின் மேல் பாய்ந்து மறைவுற்றன; அறவோனும் - அறவோனாகிய அனுமனும், நேரில் சென்று - நேராகப் போய் நின்று; அவன் வயிரக் குனி சிலை பற்றிக்கொண்டு - அக்ககுமாரனது வலிய வளைந்த வில்லைப் பிடுங்கிக் கொண்டு; எதிர் உற நின்றான் - அவன் எதிரிலே நின்றான்.

பகழிக் கோல் - அம்பு. அறவன் என முன்னரும் (5512) அனுமன் குறிக்கப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Going onto the chariot, he devoured the life of the one who held the goad before him; that sturdy, close-built chariot
  2. went down to the ground; the horses died; of the arrows that the demon's banded bow scattered,
  3. some went into his chest, some vanished into his golden shoulders; and the righteous one
  4. went straight up, seized his adamant curved bow, and stood facing him.

What the poem says

On the chariot Aṉumaṉ kills the charioteer, smashes the chariot to the ground and kills the horses. Akkaṉ's arrows bury themselves in Aṉumaṉ's chest and shoulders, but Aṉumaṉ, called here the righteous one, walks right up to him, wrenches the great bow from his hands and stands before him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēril ceṉṟu, etir kōl koḷvāṉ uyir tiṉṟāṉ; ap poru ceṟi tiṇ tēr,
pāril ceṉṟatu; pari paṭṭaṉa; avaṉ vari vil cintiya pakaḻik kōl,
mārpil ceṉṟaṉa cila; poṉ tōḷiṭai maṟaivuṟṟaṉa cila; aṟavōṉum,
nēril ceṉṟu, avaṉ vayirak kuṉi cilai paṟṟikkoṇṭu, etir uṟa niṉṟāṉ.