கம்பராமாயணம் 5741j · சுந்தர 11.35

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒரு கையால் அவன் வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும் - (அவ்வாறு அனுமன் தனது) ஒரு கையினால், அக்ககுமாரனது உறுதியான வலிய வில்லை நெருங்கிப் பிடுங்கிக் கொண்டதும்; உரவோனும் - வலியவனான அக்ககுமாரனும்; இருகையால் வலியா முன்னம் - தனது இரண்டு கைகளாலும் அந்த வில்லைப் பிடித்து இழுக்கும் முன்னம்; அது இற்று ஓடியது - அவ்வில் முறிந்து போய் விட்டது (பிறகு); அவன் - அந்த அக்ககுமாரன்; இவர் பொன் தோளின் தன் சுரிகையால் உருவி குத்தலும் - தன் உடை வாளினால், உயர்ந்த அழகிய (அனுமனது) தோளின் மேல் குத்தியதும்; அதனை - அந்த உடை வாளை; சொல்கொடு வரு தூதன் - (இராமபிரானது) சொல்லைச் சீதாபிராட்டியினிடம் சொல்லுமாறு கொண்டு வந்த தூதனாகிய அனுமன்; பொருகையால் பறியா - தனது போர் புரியும் கையினால் பறித்து; முதிர் பொறி ஓடும்படி இடை பிதிர்வித்தான் - மிக்க நெருப்புப் பொறி எங்கும் பறந்து செல்லும்படி (தன் மேல் படுவதற்கு முன் நடுவழியிலேயே பொடியாக உதிரும்படிச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he grasped the demon's hard adamant bow firmly with one hand, the strong one,
  2. before he could pull it back with both hands, found it snapped and gone; on this one's golden shoulder
  3. he drew his dagger and stabbed; and the messenger who had come bearing the word
  4. tore it away with his fighting hand and shattered it midway, so that sparks flew from the pieces.

What the poem says

Aṉumaṉ grips Akkaṉ's bow with one hand, and before Akkaṉ can pull it back with both hands it snaps. Akkaṉ draws a dagger and stabs at Aṉumaṉ's shoulder, but Aṉumaṉ, the messenger who brought Irāmaṉ's word to Cītai, snatches it and breaks it in mid-stroke in a shower of sparks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oru kaiyāl avaṉ vayirat tiṇ cilai uṟṟup paṟṟalum, uravōṉum,
iru kaiyāl ivaṉ valiyā muṉṉam, atu iṟṟu ōṭiyatu; ivar poṉ tōḷiṉ,
curikaiyāl avaṉ uruvik kuttalum, ataṉai, col koṭu varu tūtaṉ,
poru kaiyāl iṭai pitirvittāṉ, muṟi poṟi ōṭumpaṭi paṟiyāvē.