கம்பராமாயணம் 5741k · சுந்தர 11.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாளாலே பொரல் உற்றான் - வாள் கொண்டு போர்புரியத் தொடங்கிய அக்ககுமாரன்; அது இற்று மண் சேரா முனம் - அந்த வாள் ஒடிந்து தரையில் விழுவதற்கு முன்னம்; வயிரத்திண் தோளாலே பொர முடுகி - மிக்க வலிய தனது தோளினாலேயே போர் புரிய வேகமாக வந்து; இடை புக்கு தழுவிக் கோடலும் - அவ்விடம் புகுந்து அனுமனைத் தழுவிக் கொள்ள முயன்றபோது; உடல் முற்றும் - அக்ககுமாரனது உடல் முழுவதும்; நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட - நீட்சி பொருந்திய வேலாயுதம் போல (அனுமனது) உரோமங்கள் குத்தி உட்புக; மணி நெடு வால் - அனுமனுடைய அழகிய நீண்ட வால்; அவன் உடல் நிமிர் உற்று மீளாவகை - அந்த அக்ககுமாரனுடைய உடல் மேற்கிளம்பி மீளாதபடி; புடை சுற்றிக் கொண்டது - உடலின் எப்புறங்களிலும் சுற்றிப் பிணித்துக் கொண்டது; பற்றிக்கொண்டனன் - இவ்வாறு பற்றிக் கொண்ட அனுமன்; மேல் ஆனான் - (அவ்வரக்கனைக் கீழே தள்ளி அவன் மேலே எழுந்து உட்கார்ந்துகொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had set out to fight with the sword, before it broke and touched the earth,
- rushed in to fight with his hard adamant shoulders and clasped him round the waist; all over his body
- the hairs pierced like long sharp spears; the fine long tail, so that his body could not rise
- and get free, wound round his sides; holding him so, he got on top of him.
What the poem says
With his sword gone, Akkaṉ rushes in to wrestle and grabs Aṉumaṉ around the waist. Aṉumaṉ's bristling hair pierces his body like spears, and Aṉumaṉ's long tail coils around him so he cannot break free. Holding him fast, Aṉumaṉ throws him down and sits on top of him.