கம்பராமாயணம் 5741l · சுந்தர 11.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பற்றிக்கொண்டவன் - (தன் வாலினாலே அக்ககுமாரனைப்) பற்றிக் கொண்டவனான அனுமன்; வடிவாள் என ஒளிர் பல் இற்று உக - கூரிய வாள் போன்று விளங்குகின்ற பற்கள் உதிரும்படி; நிமிர் படர்கையால் எற்றி - ஓங்கிய தன் அகன்ற கையினால் (கன்னத்தில்) அறைந்து; கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இனமின் இனம் விழுவன என்ன - மேகத்திட மிருந்து வருகின்ற ஒளி தங்கிய மின்னலின் கூட்டங்கள் கீழே விழுகின்றன போல; குண்டலம் முதலாம் மணி இற்று உக - குண்டலம் முதலிய ஆபரணங்களில் உள்ள இரத்தினங்கள் அழிந்து சிந்த; அரவு நால் முழை இவர் குடர் நால - பாம்பு குகையிடத்து தொங்கல் போல அவனுடைய குடல்கள் வெளியே தொங்க; கொற்றத்திண் சுவல் - வெற்றியைத் தரும் வலிய மேடு போல் உயர்ந்த; வயிரக் கை கொடும் குத்தி - உறுதியான தனது கையைக் கொண்டு அவனைக் குத்தி; ஒரு புடை குதி கொண்டான் - ஒரு புறத்தே குதித்தான்.
வயிறு குகைபோன்றது; சரிந்த குடல்கள் குகைவாயிலில் தொங்கும் கொடிகள் போன்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who held him struck him with his long, broad hand so that his teeth, bright as whetted swords,
- broke and fell; as if swarms of bright lightning flung from the midst of the clouds were falling,
- the jewels of his earrings and the rest scattered; with his guts hanging out like a serpent from a cave,
- he punched him with his adamant hand on his hard, victorious neck, and leapt off to one side.
What the poem says
Holding Akkaṉ pinned, Aṉumaṉ slaps him so hard his sword-sharp teeth fly out. The gems from his earrings scatter like lightning falling from the clouds. Aṉumaṉ punches him with his diamond-hard fist until his entrails hang out like a snake from a cave, then leaps aside.