கம்பராமாயணம் 5741m · சுந்தர 11.38

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீத்து ஆய் ஓடின உதிரப் பெரு நதி நீராக - (அப்போது) வெள்ளமாகப் பெருகிய இரத்தப்பெரு நதியே (அரைக்கும் போது விடும்) நீராகவும்; பார் சிலை ஆக - பொருகளமே (பூமியே) அரைக்கும் அம்மிக்கல்லாகவும்; போய்த் தாழ் செறி தசை - அத்தரையில் போய் விழுந்த (அக்ககுமாரனது) நெருங்கிய தசையே; அரி சிந்தின படி பொங்க - ஊறல் அரிசிகள் சிந்திக் கிடப்பனபோல மிகுந்து விளங்கவும்; பொரும் உயிர் போகாமுன் - (அரக்கனது உடற்பகுதியைக் குழவியாகக் கொண்டு) போர் செய்கின்ற அரக்கன் உயிர் போகாமுன்னம்; மீத்தாம் நிமிர் - மேலாக எழுந்து ஓங்கிய; சுடர் வயிரக்கை கொடு பிடியா - ஒளிதங்கிய உறுதியான தன் இருகைகளைக் கொண்டு (குழவியின் இருபுறத்து) பிடித்து; விண்ணொடு மண்ணும் காண - மேலுலகத்தாரும் நில உலகத்தாரும் காணும்படி; ஊழியின் - யுக முடிவில்; உலகு ஏழ் தேயினும் - ஏழு உலகங்களும் அழிந்தாலும்; ஒரு தன் புகழ் இறை தேயாதான் - ஒப்பற்ற தன் புகழில் சிறிதும் குறையாது விளங்கும் அனுமன்; தேய்த்தான் - அரைத்து உருவில்லாமல் சேறாக்கினான்.

தேயாதான், தேய்த்தான் என்பது முரண் தொடர் அழகு. அரி சிந்தினபடி; அரைக்கும் போது, அதிர்ச்சியால் அம்மியில் உள்ள அரிசிகள் சிந்துவன போல, அரக்கன் உடலிலிருந்து தசைத்துண்டுகள் சிந்திப் புறங்களில் விழுந்து கிடந்தன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great river of blood that ran in flood for water, with the ground for a grinding stone,
  2. with the packed flesh that fell there spilling over like scattered grains of rice, before the fighting life could leave,
  3. he grasped him with his raised, bright, adamant hands, and as heaven and earth looked on,
  4. ground him away, he whose fame will not wane one bit even when the seven worlds wane at the end of the age.

What the poem says

Aṉumaṉ grinds Akkaṉ to paste as one grinds grain on a stone: the battlefield is the grinding stone, the river of blood is the water, Akkaṉ's body is the roller, and the pieces of flesh that fly off are like grains of rice jumping off the stone.

He does this in full view of heaven and earth. The poet contrasts the verb 'ground away' with Aṉumaṉ's fame, which will never be worn away even when the worlds dissolve.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīttu āy ōṭiṉa utirap peru nati nīrāka, cilai pārāka,
pōyt tāḻ ceṟi tacai ari cintiṉa paṭi poṅka, porum uyir pōkamuṉ,
mīt tām nimir cuṭar vayirak kaikoṭu piṭiyā, viṇṇoṭu maṇ kāṇa,
tēyttāṉ ūḻiyiṉ ulaku ēḻ tēyiṉum, oru taṉ pukaḻ iṟai tēyātāṉ.