கம்பராமாயணம் 5741n · சுந்தர 11.39

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் புண்தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் - (உயிர் எஞ்சிய அரக்கரில்) சிலர் புண்களிலிருந்து பெருகுகின்ற இரத்த வெள்ளத்தினுள் உயிரோடு புகுந்து ஒளிந்து கொண்டனர்; சிலர் பேயின் பொதிபண்டாரத்திடைத் தம் உடல் இட்டார் - மற்றும் சிலர் பேய்களால் சேர்த்துவைக்கப்பட்ட பிணங்கள் நிறைந்த குவியலினிடத்து (போய்ப்புகுந்து) தமது உடலை இட்டு மறைத்துக் கொண்டனர்; சிலர், பயம் உந்த பட்டார் - வேறு சில அரக்கர்கள் அச்சம் முன் பிடித்துத் தள்ள இறந்து ஒழிந்தனர்; சிலர், திண்டாடித் திசை அறியா மறுகினர், செற்றார் - மற்றும் சிலர் அலைக்கல்பட்டுத் திக்குத் தெரியாமல் கலங்கினவராய் வலியொடுங்கினார்கள்; சிலர் செலவு அற்றார் - வேறு சிலர், எங்கும் செல்லும் வலிமை அற்றவர்களானார்கள்; சிலர் படைகைவிட்டார் - வேறு சிலர் தம் கையிலிருந்த ஆயுதங்களை நழுவவிட்டவர்களாய்; கண்டார் கண்டது ஓர் திசையே - அவரவர் எதிரே கண்ட கண்ட திசை நோக்கியே; விசை கொடு கால் விட்டார் - வேகமாக ஓட்டம் பிடித்தனர்.

புறம் கொடுத்து ஓடியவர்களின் செயலுள் சில கூறப்பட்டன. கைவிட்டார் கால் விட்டார் என்பன மரபுச் சொற்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some crept, still alive, into the flood of blood pouring from wounds; some
  2. put their bodies into the heaps of corpses the ghouls had stored; some died; some, driven by fear,
  3. floundered about, not knowing which way to go; some were crushed; some could not move at all;
  4. they dropped their weapons and took to their heels toward whatever direction met their eyes.

What the poem says

With Akkaṉ dead, the surviving demons panic. Some hide alive in the pools of blood, some bury themselves in the piles of corpses gathered by ghouls, some simply die of fright, some wander lost, some are too weak to move, and others throw down their weapons and run in whatever direction they happen to be facing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṇ tāḻ kurutiyiṉ veḷḷattu, uyir koṭu pukkār cilar; cilar poti pēyiṉ
paṇṭārattiṭai iṭṭār tam uṭal; paṭṭār cilar; cilar payam unta,
tiṇṭāṭit ticai aṟiyā maṟukiṉar; ceṟṟār cilar; cilar celavu aṟṟār;
kaṇṭār kaṇṭatu ōr ticaiyē vicaikoṭu kāl viṭṭār paṭai kaiviṭṭār.