கம்பராமாயணம் 5741o · சுந்தர 11.40

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் மீன் ஆய் வேலையை உற்றார் - சில அரக்கர்கள் மீன் உருவம் கொண்டு கடலில் சேர்ந்தனர்; சிலர் பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார் - சிலர் பசுவின் வடிவில் மாறி வழிகளில் எல்லாம் மேய்வாராயினர்; சிலர் ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் - சில அரக்கர்கள், மாமிசத்தைத் தின்னும் (கழுகு, காகம் முதலிய) பறவைகளின் வடிவை உடையவரானார்கள்; சிலர் நான் மறையவர் உரு ஆனார் - வேறு சில அரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர் உருவை எடுத்துக் கொண்டனர்; சிலர் - மற்றும் சில அரக்கர்கள்; மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் - மான்போன்ற கண்களை உடைய இளமகளிர் உருவைப் பெற்றவராய்; தம் குழல் முன்னே வகிர்வு உற்றார் ஆனார் - தம் கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டவர் ஆயினர்; சிலர் “ஐயா, நின்சரண் என்றனர் - வேறு சிலர் 'ஐயனே ! யாம் உன் அடைக்கலம் என்றார்கள்; நின்றவர் அரி என்றார் - மற்றுமுள்ளோர் அரி என்ற திருமால் திருநாமத்தைக் கூறினர்.

அனுமனுக்கு அஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்பட்டன. அரி - குரங்கு என்றும் பொருள் - குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் - அது திருமால் நாமமாகக் கருதப்பட்டு உயிர் பெற்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some became fish and made for the sea; some became cows and grazed along the roads;
  2. some took the form of flesh-eating birds; some took the form of Brahmins of the four Vedas;
  3. some became young women with doe-like eyes and set about
  4. parting their hair in front; some said, 'Sir, you are our refuge!'; those still standing said 'Hari!'

What the poem says

The demons use their shape-changing powers to escape. Some turn into fish and slip into the sea, some into cows grazing by the road, some into carrion birds, some into Vedic Brahmins, and some into doe-eyed girls busily combing their hair. Others beg Aṉumaṉ for mercy.

The rest cry out 'Hari', which can mean both Viṣṇu and monkey; the commentary suggests they meant 'monkey!' in fright, but because the word is also Viṣṇu's name, it saved their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṉ āy, vēlaiyai uṟṟār cilar; cilar pacu āy vaḻitoṟum mēyvuṟṟār;
ūṉ ār paṟavaiyiṉ vaṭivu āṉār cilar; cilar nāṉmaṟaiyavar uru āṉār;
māṉ ār kaṇ iḷa maṭavār āyiṉar muṉṉē, tam kuḻal vakirvuṟṟār
āṉār cilar; cilar, "aiyā! niṉ caraṇ" eṉṟār; niṉṟavar "aṟi" eṉṟār.