கம்பராமாயணம் 5741p · சுந்தர 11.41

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் தம்தாரமும், உறு கிளையும் தமை எதிர் தழுவும் தொறும் - சில அரக்கர்கள் தமது மனைவிகளும் நெருங்கிய உறவினர்களும் தம்மைக் (கண்ட மகிழ்ச்சியால்) எதிர் வந்து தழுவிக் கொண்ட போதெல்லாம்; நுமதமர் அல்லோம் - யாங்கள் உமது சுற்றத்தினர் அல்லோம்; வானவர் வந்தோம் - நாங்கள் தேவர்கள், இப்போரைக் காண இங்கே வந்தோம்; என்று ஏகினர் - என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றனர்; சிலர் மானுயர் என வாய் விட்டார் - வேறு சிலர் நாங்கள் மானிடர் (அரக்கர் அல்லர்) என்று பெருங்கூக்குரலிட்டனர்; சிலர் - வேறு சிலர்; மந்தாரம் கிளர் பொழில் வாய் வண்டுகள் ஆனார் - மந்தார மரங்கள் விளங்கும் அந்தச் சோலையினிடத்து வண்டுகளின் வடிவினை எடுத்துக் கொண்டார்; சிலர் மருள் கொண்டார் - இன்னும் சிலர் செய்வது இன்னதென்று அறியாமல் மயங்கி நின்றனர்; சிலர் இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் - வேறு சில அரக்கர்கள் பிறைச்சந்திரன் போன்று வளைந்த தம் பற்களை ஒடித்துக் கொண்டனர்; எரிபோல் குஞ்சியை இருள்வித்தார் - நெருப்புச் சுடர் போன்று சிவந்த தமது தலைமயிரை இருள் போலக் கறுப்பாக்கிக் கொண்டனர்

அனுமனுக்கு அஞ்சிய அரக்கர்கள் தம்மை மாற்றிக் கொண்ட சில செயல்களும் சில சொற்களும் கூறப்பட்டன. கோரைப் பற்கள் தங்களை அரக்கர் என அடையாளம் காட்டிவிடுமே என அஞ்சி அவற்றை ஒடித்துக் கொண்டனராம். அவ்வாறே செந்நிற முடியைக் கருநிறமாக்கி அரக்கத் தோற்றத்தை மாற்றிக் கொண்டனர் என்கிறார். தோல்வியால் வீரத்துக்கு இழுக்கு தேடிக்கொண்டதோடு உயிர்மீது ஆசை வைத்து, எப்படியாவது தப்பவேண்டுமே என்று பல்வேறு பொய்க் கோலமும் பொய்ம் மொழிகளும் கொண்டு கோழைகளாயினர் என்பதாம். மகளிர் முடியைக் கூந்தல் என்றும் ஆடவர் முடியைக் குஞ்சி என்றும் சொல்லுதல் மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whenever their own wives and close kin ran up and embraced them, some said, 'We are not your people;
  2. we are gods who have come,' and went off; some cried aloud, 'We are humans!';
  3. some became bees in the groves where the mandāra trees bloom; some were dazed;
  4. some broke off their moon-curved fangs; some made their fire-red hair dark.

What the poem says

More ways the demons try to save themselves. When their wives and relatives run to hug them, some insist they are gods who have come to watch, not demons; some shout that they are humans. Some turn into bees in the gardens, some stand bewildered.

Others snap off their crescent fangs and blacken their flame-red hair so no one will recognise them as demons. The poet mocks them as cowards who would disgrace their valour for the love of life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tam tāramum, uṟu kiḷaiyum, tamai etir taḻuvumtoṟum, "numa tamar allēm;
vantēm, vāṉavar" eṉṟu, ēkiṉar cilar; cilar "māṉuyar" eṉa, vāy viṭṭār;
mantāram kiḷar poḻilvāy vaṇṭukaḷ āṉār cilar; cilar maruḷkoṇṭār;
intu ār eyiṟukaḷ iṟuvittār cilar; eripōl kuñciyai iruḷvittār.