கம்பராமாயணம் 5741q · சுந்தர 11.42

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குண்டலக் குழைமுகம் - குண்டலம் என்னும் காதணி அணிந்த செவியை உடைய முகத்தையும்; குங்குமக் கொங்கையார் - குங்குமக் குழம்பு பூசப் பெற்ற மார்பகங்களையும் உடைய அரக்கமகளிர்கள்; வண்டு அலைத்து எழுகுழல் கற்றை - வண்டுகளை அலையச் செய்து மேல் எழும்பப் பெற்ற தமது கூந்தல் தொகுதி; கால் வருட - (அவிழ்ந்து) கால்களிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க; அலத்தக விரைக் குமுத வாய் விண்டு விரிதலால் - செம்பஞ்சு ஊட்டப் பெற்றதும், வாசனை உடையதும், குமுதமலர் போன்றதுமான வாய்கள் திறந்து விரிவடைதலால்; அவ் ஊர் அழுத பேர் அமலை - அந்த இலங்கை நகரத்தார் அழுத பெரும் ஓசை; அண்டம் உற்றுளது - மேலுலகம் வரை எட்டிற்று.

அரக்கிமார்கள் தமது கூந்தல் காலில் விழும்படி, விரித்துக் கொண்டு வாய் திறந்து பேரொலி எழுப்பி அழுதனர் என்பதாம். அலத்தகம் - செம்பஞ்சு; வாய்க்கும் செம் பஞ்சு பூசப் பெறுவது உண்டு அம்மலாடியும் கையும் மணி கிளர் பவழவாயும்.... அலத்தகம் எழுதி விட்டாள்” (சீவக. 2440) குண்டலக் குழை - குண்டலமாகிய குழை என இருபெயரொட்டாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the women with earrings on their faces and saffron on their breasts
  2. let their masses of hair, which set the bees astir as it rose, sweep down to their feet,
  3. and opened wide their fragrant lily-like mouths stained with red dye,
  4. the great clamour of that city's weeping reached the vault of heaven.

What the poem says

The demon women of Laṅkā, adorned with earrings and breasts smeared with saffron, mourn the dead. They let their hair fall loose to their feet, scattering the bees nesting in it, and open their red-tinted, lily-like mouths to wail so loudly that the sound of the city's grief reaches heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṇṭalak kuḻai mukak kuṅkumak koṅkaiyār,
vaṇṭu alaittu eḻu kuḻal kaṟṟai kāl varuṭavē,
viṇṭu, alattaka viraik kumuta vāy viritalāl,
aṇṭam uṟṟuḷatu, av ūr aḻuta pēr amalaiyē!