கம்பராமாயணம் 5741u · சுந்தர 11.46

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீட்டுவாள் அனையகண் - தீட்டப் பெற்ற வாள் போன்ற கண்களை உடைய, திரு அனாள் ஓர் தெரிவை - இலக்குமி போன்ற ஒரு அரக்கி; ஆட்டில் நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி - கூத்தாடும் தொழிலில் இருந்து சோர்வதான தலையற்றதோர் உடலை (கவந்தத்தை) தலையோடு சேர்த்து; (அதனை நோக்கி) “நின் ஆர் உயிர்த் துணைவன் - 'உனது ஒப்பற்ற உயிர்த் துணைவனாகிய, எம் கோவினை - எமது தலைவனை; நீ காட்டுவாய் ஆதி” என்று - நீ எனக்குக் காட்டுவாயாக ' என்று சொல்லி; அழுது கை கூப்பினாள் - அழுதவளாய்த் தனது கைகளைக் குவித்து வணங்கினாள்.

வீரம் மிடைந்த அவல ஓவியமாகக் கணவனைத் தேடும் அரக்கி சித்தரிக்கப்பட்டுள்ளது அருமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One woman, with eyes like whetted swords, lovely as Tiru,
  2. took a headless trunk that was flagging as it danced,
  3. joined the head to it, and said, 'Show me your dear life's companion, my lord,'
  4. and wept, and folded her hands in prayer.

What the poem says

A headless body, still moving in the death-dance that headless warriors were said to perform on the battlefield, is beginning to slow down. A beautiful demon woman sets a head on it and, weeping with joined hands, begs it to show her its dear companion, her husband.

The commentary admires this picture of grief mingled with heroism.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīṭṭu vāḷ aṉaiya kaṇ terivai, ōr tiru aṉāḷ,
āṭṭil niṉṟu ayarvatu ōr aṟu talaik kuṟaiyiṉaik
kūṭṭi, "niṉ ār uyirt tuṇaivaṉ, em kōṉai,
kāṭṭuvāyāti" eṉṟu, aḻutu kai kūppiṉāḷ.