கம்பராமாயணம் 5741w · சுந்தர 11.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயன் மகள் - அசுரசிற்பியாகிய மயனது மகளான மண்டோதரி; கயல் மகிழ் கண் இணை - கயல் மீன் போன்று மதர்த்திருக்கும் கண்கள் இரண்டும்; கலுழி கான்று உக - நீர் பெருகச் சிந்தவும்; புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற - காள மேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல் மண்ணின் புழுதியிலே புரளவும்; அயன் மகன் மகன் மகன் - பிரமதேவன் குமாரனான புலத்திய முனிவரின் மகனாகிய விசரவஸ் என்பவனது மகனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தனள் - பாதங்களில் விழுந்து; வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு; மாழ்கினாள் - கதறிப் புலம்பினாள்.
மண்டோதரி, தன் குமாரன் அட்சன் (அக்ககுமாரன்) இறக்கக் காரணமாயிருந்த இராவணனது கால்களில் விழுந்து அழுது புலம்பினாள். மகளிர் பெரும் துக்கம் வந்த போது, வயிற்றில் அடித்துக் கொள்ளும் இயல்பினராவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her pair of carp-like eyes pouring out streams of tears,
- her curled tresses, dark as rain-clouds, rolling in the dust,
- she fell at the feet of the son of the son of the son of Ayaṉ,
- Mayaṉ's daughter, and beat her belly and wailed in anguish.
What the poem says
Maṇṭōtari, daughter of the demon architect Mayaṉ and mother of Akkaṉ, throws herself at the feet of Irāvaṇaṉ, whose orders led to their son's death. With tears streaming from her eyes and her dark hair trailing in the dust, she beats her belly and wails, as women did in great grief.
Irāvaṇaṉ is called the great-grandson of Ayaṉ (Brahmā): Brahmā's son was Pulastya, whose son Viśravas was Irāvaṇaṉ's father.