கம்பராமாயணம் 5742 · சுந்தர 12.1

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ் வழி அவ் உரை கேட்ட ஆண்தகை
வெவ் வழி எரி புக வெகுளி வீங்கினான்
எவ்வழி உலகமும் குலைய இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அப்போது; அவ் உரை கேட்ட ஆண்தகை - அக்ககுமாரன் இறந்தான் என்ற வார்த்தையைக் கேட்ட ஆண்மைக்குணம் உடையவனும்; இந்திரன் தெவ் அழி தர உயர் விசயச் சீர்த்தியான் - இந்திரனாகிய பகைவன் வலி அழியுமாறு உயர்ந்த வெற்றியைக் கொண்ட பெரும் புகழ் உடையவனுமாகிய மேகநாதன்; வெவ்விழி எரி உக - (தனது) கொடிய கண்களினின்று நெருப்புச் சிந்தவும்; எவ்வழி உலகமும் குலைய - எந்த உலகமும் நடுங்கி வருந்தவும்; வெகுளி வீங்கினான் - கோபம் மிக்கவனானான்.

மேகநாதன் இந்திரசித்து எனப்பெயர் பெற்ற வரலாறு “இந்திரத்தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்' என்ற தொடரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெவ் - பகை; வீங்குதல் - மிகுதல் (வீங்கினான்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, hearing those words, that man of valour
  2. swelled with rage, so that fire fell from his fierce eyes
  3. and the worlds in every direction shook, he of the lofty fame of victory
  4. won by destroying his foe Intiraṉ.

What the poem says

This canto, the Pācap paṭalam, tells how Intiracittu binds Aṉumaṉ with the pācam, the Brahmā weapon that takes the form of a great serpent.

Hearing of his younger brother Akkaṉ's death, Mēkanātaṉ, who earned the name Intiracittu, conqueror of Indra, by defeating the king of the gods, flares up in a rage that makes fire pour from his eyes and sets all the worlds trembling.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi av urai kēṭṭa āṇtakai
vev viḻi eri uka vekuḷi vīṅkiṉāṉ
evvaḻi ulakamum kulaiya intirat
tev aḻitara uyar vicayac cīrttiyāṉ.