கம்பராமாயணம் 5743 · சுந்தர 12.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒருவன் - ஒப்பற்றவனான இந்திரசித்து; அரம் சுடர் வேல் - அரத்தினால் அராவி ஒளி வீசப்பெற்ற வேலாயுதத்தை உடைய; தனது அனுசன் - தனது தம்பியாகிய அக்கன்; இற்ற சொல் உரம் சுட - இறந்தான் என்ற வார்த்தை தனது மனத்தை எரித்தலால்; எரி உயிர்த்து - நெருப்புச் சுடர் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய - முப்புரத்தை எரிப்பதற்கு கட்டமைந்த வில்லாக மேரு மலையை வளைத்த; பரம் சுடர் ஒருவனை - மேலான சோதி வடிவினனான சிவபிரானை; பொருவும் பான்மையான் - ஒக்கின்ற தன்மை உடையவனாய்; ஓங்கினான் - போருக்கு எழுந்தான்.
அனுசன் - தம்பி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the word that his younger brother of the file-bright spear was dead
- scorched his heart, the peerless one, breathing fire, rose up,
- in bearing like the one supreme Light who bent
- the mountain into a banded bow to burn the cities.
What the poem says
The news of his brother's death burns Intiracittu's heart. Breathing hot sighs like flames, he rises for battle, looking like Śiva, the supreme radiance, who bent Mount Mēru into a bow to burn the three flying cities of the demons.