கம்பராமாயணம் 5744 · சுந்தர 12.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விசும்பினுக்கு எல்லை காட்டுவ - வானத்தினது மேல் எல்லையை (இவ்வளவு என்று தனது உயர்ச்சியினால்) தெரிவிப்பனவான; ஆறு இருநூறு பேய் பூண்ட - ஆயிரத்து இருநூறு பேய்கள் பூட்டப் பெற்றுள்ளதான; ஆழித்தேர் ஏறினன் - வலிய சக்கரங்களை உடைய தேரில் (மேகநாதன் ஏறினான்; கூறின கூறின சொற்கள் - (அங்ஙனம் ஏறிய அவன் மிகுதியாகச் சொன்ன வீர வார்த்தைகள்; கோத்தலால் நெடுந்திசை பீறின - ஒன்றோடு ஒன்று தொடுத்து வந்தமையால், (அவ்வதிர்ச்சியால்) நெடிய திசைகள் எல்லாம் பிளவுபட்டன; அண்டம் பிளந்தது - அண்ட கோளமும் பிளவுப்பட்டது.
இந்திரசித்து, போருக்குச் சென்ற வேகமும் வீரமும் கூறப்பட்டது. விசும்பினுக்கு எல்லை காட்டுவ - ஆகாயத்தின் மேல் எல்லை வரை உயர்ந்து விளங்கியது என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He mounted a wheeled chariot, so tall it showed where the sky ends,
- yoked with six times two hundred ghouls;
- as the words he spoke and spoke were strung together,
- the long quarters were torn apart and the cosmic egg split open.
What the poem says
Intiracittu mounts his towering chariot, drawn by twelve hundred ghouls, so high it reaches the top of the sky. As he pours out vow after vow of vengeance, the thunder of his words seems to split the directions and crack the shell of the universe.