கம்பராமாயணம் 5745 · சுந்தர 12.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கழலும் தாரும் பேரியும் - இந்திரசித்து அணிந்திருந்த வீரக் கழல்களும் மாலைகளும் (அவனுடன் சென்ற) முரசங்களும்; அசனி அஞ்ச ஆர்த்தன - இடியும் அஞ்சிப் பின்னிடும்படி மிகுதியாக ஒலித்தன. (அம்முழக்கம் கேட்டு); அமரர் வேந்தன் உயிர் குலைய மேனி வேர்த்து வெதும்பினன் - தேவர் தலைவனான இந்திரன் உயிர் நடுங்க உடல் வியர்த்து அச்சத்தால் வெதும்பி வருந்தினான்; தேவர்க்கும் தேவர் ஆய மூர்த்திகள் தாமும் - எல்லாத் தேவர்க்கும் தலைமைத் தேவர்களான மும்மூர்த்திகளும்; போரும் சீர்த்தது என்னா - போர் உச்சநிலை அடைந்தது என்று; தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் - அவரவர் செய்தொழிலின் (படைத்தல், காத்தல், அழித்தல்) முயற்சியைக் கைவிட்டார்கள்.
மேகநாதன் போருக்குப் புறப்பட்டதைக் கண்ட, இந்திரன், மும்மூர்த்திகள் முதலாயோர் நிலை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His anklets, his garlands and the war-drums roared till the thunderbolt took fright;
- the king of the immortals sweated, his life shook, and his body burned with fear;
- saying 'Now the war has reached its height,' even the Three
- who are gods of the gods gave up the work of their yoga.
What the poem says
As Intiracittu sets out, the jingling of his anklets and garlands and the boom of his drums are louder than thunder. Indra, whom he once defeated, breaks into a sweat of terror.
Even Brahmā, Viṣṇu and Śiva, the gods above all gods, stop their cosmic work of creating, preserving and destroying, sensing that the war has reached its climax.