கம்பராமாயணம் 5747 · சுந்தர 12.6

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெற்பு என்றாலும் - மலை எதிர்த்துள்ளது என்றாலும்; கூறு இரண்டு ஆக்கும் - அதனை இரு கூறாகப் பிளக்கக்கூடிய; வேல் திரண்டனவும் - வேல் வீரர்கள் படைதிரண்டு வந்தவையும்; வில்லுமிடைந்தவும் - வில்லாளிகளாக நெருங்கி வந்தவையும்; வாள்கை குழுவையும் - வாள் ஏந்திய கையை உடைய படைகளின் கூட்டத்தையும்; குணிக்கல் ஆற்றேம் - இவ்வளவு என்று கணக்கிட்டுக் கூறும் வலிமை உடையோம் அல்லேம்; இரண்டு அருகு சேறு செய்யும் செறிமதம் - இருபுறத்திலும் நிலத்தைச் சேறாக்கும் மதநீர்ப் பெருக்கையும்; சிறுகண் யானை - சிறிய கண்களையும் உடைய யானைகளின் தொகை; ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி - ஆறாயிரத்தின் இருமடங்கான பன்னீராயிரம்; தேர்த் தொகையும் அஃதே - தேர்ப் படைகளின் தொகையும் அவ்வளவே (பன்னீராயிரம்)

கவிக்கூற்று வேல், வில், வாள் ஏந்திய வீரர்கள் கணக்கிட முடியாதவர்கள். யானை, தேர்ப்படைகள் ஒவ்வொன்றும் பன்னீராயிரம் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The massed spearmen, the crowding bowmen, and the throng with swords in hand
  2. that could split even a mountain in two, we cannot count;
  3. the small-eyed elephants with thick rut that turns both sides of the way to mud
  4. numbered twice six times five hundred, twice over; and the chariots were as many.

What the poem says

The poet describes Intiracittu's army. The spearmen, archers and swordsmen, able to cut a mountain in two, are too many to count. The elephants, whose rut turns the ground to mud on either side, number twelve thousand, and so do the chariots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēl tiraṇṭaṉavum, villum miṭaintavum, veṟpu eṉṟālum
kūṟu iraṇṭu ākkum vāḷ kaik kuḻuvaiyum, kuṇikkal āṟṟēm;
cēṟu iraṇṭu aruku ceyyum ceṟimatac ciṟu kaṇ yāṉai
āṟu iraṇṭu añcu nūṟṟiṉ iraṭṭi; tērt tokaiyum aḵtē.