கம்பராமாயணம் 5748 · சுந்தர 12.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆய - அவ்வாறே (பன்னீராயிரம் என்னும் தொகையினதாய்); மாத்தானை தான் வந்து அண்மியது அண்ம - குதிரைப்படை தானும் வந்து அங்குக் கூடியது. அவ்வாறு அப்படைகள் பலவும் வந்து கூடவும், ஆண்மை தீயவாள் நிருதர் வேந்தர் - வீரம் நிறைந்த கொடிய வாள் ஏந்திய அரக்கர் அரசர்கள்; சேர்ந்தவர் சேர - இரண்டு தன் அருகில் வந்து சேரவும்; அருவி சோர் வயிரக்கண்ணான் - அருவிபோல நீர் ஒழுகுகின்ற பகைமை கொண்ட கண்களை உடைய இந்திரசித்து; “ஏ” எனும் அளவில் - விரைவிலே, தேரில் வந்தான் - தேரில் ஏறி வந்து; இராவணன் இருந்த - இராவணன் வசித்திருந்த; யாணர் வாயில் தோய் கோயில் புக்கான் - அழகிய வாயில் பொருந்திய அரண்மனையினுள் புகுந்தான்.
முன் பாடலில் வேற்படை முதலிய ஐந்தினைக் கூறி, இதனுள் குதிரைப்படை தனித்துக் கூறப்பட்டது. அனைத்துப் படைகளும் தன்னை வந்து நெருங்கியதும், இந்திரசித்து, இராவணனின் அரண்மனைக்குச் சென்றான். யாணர் - அழகு; தோய் - பொருந்திய.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That great host of horse, as many again, came and drew near; and as it drew near, and the demon lords
- with fierce, valiant swords who had joined him gathered round, in his chariot
- he came in the time it takes to say 'ē', and entered the palace with the splendid gateway
- where Irāvaṇaṉ sat, he of the hard eyes streaming like a waterfall.
What the poem says
The cavalry, twelve thousand strong, also assembles, and the demon chieftains gather around Intiracittu. Tears pouring from his fierce eyes, he drives at once to Irāvaṇaṉ's palace and goes in.