கம்பராமாயணம் 5749 · சுந்தர 12.8

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்கினான்; தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினான்; அழுது சோர்ந்தான்;
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பல் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

தாள் இணை வீழ்ந்தான் - (அரண்மனை புகுந்த இந்திரசித்து) இராவணனது இரு பாதங்களில் விழுந்து; தம்பிக்கு இரங்குவான் - தம்பி அக்ககுமாரன் இறந்தமைக்குத் துயர் கொண்டு புலம்புவானான்; தறுகணானும் - அஞ்சாமை உடைய இராவணனும்; தோள் இணை பற்றி ஏந்தி - இந்திரசித்துவின் இரண்டு தோள்களையும் பிடித்து எடுத்து; தழுவினன் அழுது சோர்ந்தான் - அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு தானும் அழுது வருந்திச் சோர்வுற்றான்; இணைவாள் நெடுங்கண் மாதர் - இருவாள்கள் போன்ற நெடுங்கண்களை உடைய அரக்கர் குல மகளிர்கள்; வயிறு அலைத்து அலறி மாழ்க - வயிற்றில் அடித்துக்கொண்டு கதறி மயங்கிச் சோர; மீளிபோல் மொய்ம்பினானும் - சிங்கம் போன்ற வலிமை உடைய இந்திரசித்தும்; விலக்கினன் விளம்பலுற்றான் - அவர்களை விலக்கி, தந்தையை நோக்கிப் பேசத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He fell at his two feet, grieving for his brother; and the fearless king
  2. took him by both shoulders, lifted him up and embraced him, and wept and swooned;
  3. as the women with long eyes like a pair of swords beat their bellies, shrieked and fainted,
  4. he of the lion's strength held them off and began to speak.

What the poem says

Intiracittu falls at his father's feet mourning his brother. Irāvaṇaṉ, usually fearless, lifts him up, embraces him and breaks down in tears. The palace women beat their bellies and wail, but Intiracittu, strong as a lion, quiets them and begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷ iṇai vīḻntāṉ; tampikku iraṅkuvāṉ; taṟukaṇāṉum
tōḷ iṇai paṟṟi ēntit taḻuviṉaṉ; aḻutu cōrntāṉ;
vāḷ iṇai neṭuṅ kaṇ mātar vayiṟu alaittu alaṟi māḻka,
mīḷi pōl moympiṉāṉum vilakkiṉaṉ; viḷampaluṟṟāṉ.