கம்பராமாயணம் 5750 · சுந்தர 12.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீ உறுதி ஒன்றும் ஓராய் - நீ, நன்மை தரத்தக்கதான ஒன்றையும் ஆலோசிக்கின்றாயல்லை; உற்றிருந்து உளையகிற்றி - நடந்ததை அநுபவித்து வாளா இருந்து வருந்துகின்றாய்; வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் - கொடிய வலிமை உடைய குரங்கினது வலியின் தன்மையை முறைப்படி உணர்ந்திருந்தும்; நீர் சென்று பொருதிர் என்று - நீங்கள் போய் அக்குரங்குடன் போர் செய்யுங்கள் என்று; திறம் திறம் செலுத்தி - வரிசைவரிசையாக அனுப்பி; அரக்கர்தம் குழுவை எல்லாம் - அரக்கர் கூட்டத்தை எல்லாம்; நீயே அன்றோ தேயக் கொன்றனை - நீ அல்லவா குறைந்தொழியும்படி கொன்று விட்டாய்.
'அன்னோ' என்பது கழிவிரக்கத்தைக் காட்டுவது. மரபுளி உணர்தல். அனுமன் கடல் கடந்து வந்து அசோகவனத்தை அழித்தது முதலாக நடந்த செயல்களை அறிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You do not weigh a single thing for your own good; you sit and suffer what has happened;
- though you knew full well the might of that strong, valiant monkey, alas,
- you said, "Go and fight," and sent them out batch after batch;
- was it not you yourself who killed off the whole host of the demons?'
What the poem says
Intiracittu reproaches his father. Irāvaṇaṉ does nothing useful, only sits and grieves. He knew how strong the monkey was from all it had already done, yet he sent out his warriors in batches, one after another, to be killed. In effect, Intiracittu says, Irāvaṇaṉ himself has destroyed the demon army.