கம்பராமாயணம் 5751 · சுந்தர 12.10

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்று இப்
பைங்கழல் அரக்கரோடும் உடன் சென்ற ப குதிச் சேனை,
இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால், என்பார் தாம் எனும் தரத்தது ஆமோ.

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - எனது தந்தையே !; கிங்கரர், சம்புமாலி - கிங்கரர் என்னும் போர் வீரர்களும், சம்புமாலி என்பவனும்; கேடு இலா ஐவர் - அழிவில்லாத பஞ்சசேனாபதிகளும்; என்று இப்பைங்கழல் அரக்கரோடும் - என்று சொல்லப்படுகின்ற இந்தப் பசுமையான வீரக்கழல் அணிந்த அரக்க வீரர்களுடன்; உடன்சென்ற பகுதிச்சேனை - கூடிச் சென்ற சேனையின் பாகங்களில்; இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல் - ஒருவரேனும் இங்குத் திரும்பி வந்தார் இல்லை என்றால்; குரங்கு அது ஆமே ! - அது குரங்கு என்று சொல்லத்தக்கதா ?; சங்கரன், அயன், மால் என்பார் தாம் - சிவபிரான், பிரமன், திருமால் என்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகள் தாம்; எனும் தகையது - என்று கருதத்தகுவதாகும்.

போருக்குச் சென்றவர் ஒருவரும் மீளவில்லை என்றால் எதிர்த்துப் போர் செய்வது குரங்கா ? அன்று; மும்மூர்த்திகளின் சொரூபம் என்று கருத வேண்டும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Kiṅkarars, Campumāli, the five who knew no defeat, and of the divisions of the army
  2. that went with these demons of green anklets,
  3. if not one has come back here, then that monkey, my father,
  4. is of such a kind that one must say it is Caṅkaraṉ, Ayaṉ and Māl in one.

What the poem says

Intiracittu lists those who have been sent and killed: the Kiṅkarar guards, Campumāli, the five generals and all their troops. Since not one has returned, he says, this cannot be an ordinary monkey; it must be Śiva, Brahmā and Viṣṇu combined.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṅkarar, campumāli, kēṭu ilā aivar, eṉṟu ip
paiṅkaḻal arakkarōṭum uṭaṉ ceṉṟa pa kutic cēṉai,
iṅku oru pērum mīṇṭār illaiyēl, kuraṅku atu, entāy!
caṅkaraṉ, ayaṉ, māl, eṉpār tām eṉum takaiyatu āmē.