கம்பராமாயணம் 5752 · சுந்தர 12.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திக்கய வலியும் - எட்டுத்திக்கு யானைகளின் வலிமையையும்; மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கயிலையோடும் - முன்னொரு காலத்தில் முப்புரத்தையும் எரியும்படி அழித்திட்ட சிவபிரானது கைலை மலையையும்; உலகு ஒரு மூன்றும் வென்றாய் - மூன்று உலகங்களையும் வென்றவனாகிய நீ (இப்போது); அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை - அக்ககுமாரனைக் கொன்று (தான் உயிரோடு) நின்ற இந்தக் குரங்கை; ஆற்றல் காண்டி - அதன் ஆற்றல் காண்பிக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறாய் (விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்; இனிப் புக்கு வென்றும் என்றால் - இவ்வளவு அழிவுக்குப் பின் நாம் போர்க்களம் சென்று அதனை வெல்வோம் என்று சொன்னால்; புலம்பு அன்றி - அது வீண்பிதற்றலே அல்லாமல்; புலமைத்து ஆமோ ? - அறிவுடைய செயலாகுமோ (ஆகாது என்றபடி).
ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல செய்து விட்டாய். இனி அக்குரங்கை நாம் வென்றாலும் நமக்குப் புகழ் இல்லை என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You who conquered the strength of the elephants of the quarters, and the three-eyed god
- who long ago burned the triple city, together with his Kailāsa, and all three worlds,
- now sit watching the prowess of the monkey that has killed Akkaṉ and still stands;
- if we now go in and say we have won, would that be wisdom, or mere babble?
What the poem says
Intiracittu goes on. Irāvaṇaṉ has conquered the elephants of the directions, Śiva's Kailāsa and the three worlds, yet he has sat back and let this monkey show off its strength until it killed Akkaṉ, as if he were watching a play.
After so much loss, he says, even if they now go out and beat the monkey, boasting of victory would be empty talk; it can bring them no glory.