கம்பராமாயணம் 5753 · சுந்தர 12.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயினும் - ஆனாலும்; ஐய! - ஐயனே!; ஆண் தொழில் குரங்கை - வீரச் செயலில் சிறந்த இந்தக் குரங்கை; “ஏ” எனும் அளவில் - மிகச் சுருங்கிய காலத்தில்; யானே நொய்தின் பற்றி தருகுவென் - நானே எளிதில் பிடித்துக் கொடுப்பேன்; இனி, நீ இடர் என்று ஒன்றும் உழக்கற்பாலை அல்லை - இனிமேல் நீ துன்பம் ஒரு சிறிதையும் கொண்டு வருந்தவேண்டியதில்லை; நீடு இருத்தி என்னா - நீண்டகாலம் வாழ்ந்திருப்பாய் என்று சொல்லிவிட்டு; அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான் - தேவர்க்கரசனான இந்திரனை, அவன் அடைந்திருந்த புகழ்களோடு சிறைப்பற்றிக் கொண்டு போனவனான மேகநாதன்; போயினன் - அனுமனை நோக்கிப் போர்க்களம் சென்றான்.
மிக்க அன்பினால், மைந்தன் (மேகநாதன்) தன் தந்தைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, போர்க்களம் சென்றான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even so, sir, this monkey of manly deeds I myself will easily
- seize and bring you in the time it takes to say "ē"; from now on you need not
- suffer any trouble at all; live long,' he said,
- and went, he who had carried off the king of the gods together with his glory.
What the poem says
Having spoken his mind, Intiracittu promises to capture the monkey in an instant and bring it to his father, so that Irāvaṇaṉ need not worry any more. He wishes his father long life and sets out, the warrior who once dragged Indra away as a prisoner and took his glory with him.