கம்பராமாயணம் 5753g · சுந்தர 12.12g
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரம் தெறும் அயிலின் காடும் - அரத்தால் தீட்டிக்கூர்மை செய்யப்பெற்ற வேற்படைத் தொகுதியும்; அழல் உமிழ் குந்தக்காடும் - நெருப்பைக் கக்குகின்ற குந்தப் (ஈட்டி) படையின் மிகுதியும்; சரம் தரு சிலையின் காடும் - அம்புகளை எய்கின்ற விற்படைப்பெருக்கமும்; தானவர் கடலும் - (இவற்றை எறிந்து, வீசி, எய்கின்ற) அரக்கர் திரளும்; இன்ன - மற்றும் இது போன்றனவும்; நிரந்தரம் - எப்பொழுதும் ஓயாது ஒலிக்கும்; சங்கு தாரை - சங்கு, தாரை போன்ற வாத்தியங்களும் சேர்தலினால்; நிலமகள் முதுகை ஆற்றாள் - பூதேவி பாரம் சுமக்கத் தன் முதுகு ஆற்றாதவள் ஆனாள் (இவ்வாறு பூதேவி வருந்தும்படி), புரந்தர சித்து - இந்திரசித்து; வந்தான் - போர்க்கு வந்தான்; என்றன பொன்னின் சின்னம் - என்று பொற்சின்னங்கள் இயம்பின.
முதுகை ஆற்றாள் என்பதுவரை படைப்பெருக்கு கண்ட கவியின் கூற்றாக ஆகி இறுதி அடி மட்டும் சின்னம் கூறுவதாக ஆக்கலும் ஒன்று. புரந்தரன் - இந்திரன்; இந்திரசித்து புரந்தர சித்து எனப்பட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The forests of file-sharpened spears, the forests of fire-spitting lances,
- the forests of arrow-shooting bows, the sea of dānavas, and with these
- the ceaseless conches and trumpets: the earth-goddess could not bear them on her back;
- 'Purantaracittu has come!' proclaimed the golden horns.
What the poem says
Forests of spears, lances and bows, an ocean of demon soldiers and the never-ending blare of conches and trumpets weigh so heavily on the earth that the earth-goddess can hardly bear them. The golden horns announce: 'The conqueror of Indra has come!'
Purantaraṉ is a name of Indra, so Purantaracittu is another form of Intiracittu.